பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு
சென்னை: ஒரு காலத்தில் லீடர், லீடர் என்று கை கட்டிக் கொண்டு நின்றவனுக்கு வில்லிவாக்கத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட ஆதவ் அர்ஜுனா தயாராகி வரும் சூழலில், அவர் நயவஞ்சகத்தோடு சுற்றி திரிவதாகவும் மறைமுகமாக சாடியுள்ளார்.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வர விடாமல் திமுக மிரட்டியது என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி இருந்தார். இதன்பின் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை காரணமாக வேறு வழியின்றி ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கோரினார். இருப்பினும் ஆதவ் அர்ஜுனா திமுக மீது தொடர்ச்சியான வன்மத்தை வெளிப்படுத்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், அதிகாரம் கைக்கு கிடைப்பதற்கு முன்பாகவே அதிகாரத் திமிர்தனத்தோடு பணம் இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற மமதையோடு பெரியர்கள், சிறியவர்கள் என்று பாராமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நாகரீகம் தவறி நயவஞ்சகத்தோடு சுற்றி திரியும் ஒரு கூட்டத்திற்கு வில்லிவாக்கத்தில் தக்க பதிலடியை திமுக கொடுக்கும்.
ஒரு காலத்தில் லீடர் லீட்டர் என்று கை கட்டி கொண்டு நின்றவன் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நோக்கத்துடன் பேசுகின்றனர். இருக்கையில் கூட அமர மாட்டேன் என்று பின்னால் நின்று கொண்டிருந்தவர் தற்போது எங்கள் இயக்கத்திற்கு அறிவு பரிசோதனை பற்றி பேசுகிறார். அவர்கள் அறிவு பரிசோதனை செய்வதற்கு சரியான இடம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தான்.
எங்கள் தலைவரையும், எங்கள் இயக்கத்தையும் இழிவுபடுத்த நினைக்கிறவன் யாராக இருந்தாலும், எங்கள் தாயே தடுத்தாலும் விட மாட்டேன் என்ற கொள்கையில் திமுகவை சேர்ந்தவன் களட்ஜ்ஹ்தில் வீறு கொண்டு நிற்பான். பவள விழா கண்ட பேரியக்கம் நிச்சயம் பால்வாடி இயக்கத்தில் தகுந்த பாடத்தை கற்பிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. சென்னை நீண்ட ஆண்டுகளாகவே திமுகவின் கோட்டையாக இருந்து வரும் சூழலில், தவெகவின் முக்கிய தலைவர்கள் பலரும் சென்னையில் போட்டியிடுவதால், திமுக தனது வேகத்தை அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications