நல்ல நேரம் குறித்து நடத்தப்படும் அமைச்சரவை மாற்றம்.. பகீர் பாஜக.. குபீர் திமுக
சென்னை: அதோ.. இதோ என்று கூறப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் இன்று மதியம் அதிகாரபூர்வமாக நடக்க உள்ளது. இது அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை எழுப்பியது. ஒரு பக்கம் வரவேற்பு, மறுபக்கம் விமர்சனம் என இரண்டும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் பதவியேற்பு நிகழ்ச்சி நல்ல நேரம் குறிக்கப்பட்டு நடத்தப்படுவதாக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி வந்தது. ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று இரவு வெளியான அறிவிப்பு அமைச்சரவை மாற்றத்தை உறுதி செய்துவிட்டது. அதில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ், க.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகிய மூன்று பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜி, மற்றும் கோவி. செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகிய நான்கு பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். புதிய அமைச்சர்களுக்கான இலாகா அறிவிக்கப்படவில்லை. மேலும் பல அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
இது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவது கடும் விமர்சனத்துள்ளாகியுள்ளது. முன்னதாக அமைச்சரவை மாற்றம் எப்போது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில் அக்டோபர் மாதம் தான் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றும் கூறியிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்து விட்டார்.
இதனால் இன்றைய தினமே ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் பகுத்தறிவு பேசும் திமுக, அமைச்சரவை மாற்றத்துக்கு நல்ல நேரம் குறித்து பதவியேற்பதாக பாஜக விமர்சித்துள்ளது. 29.9.2024 ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலம் ஆகும். பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை எமகண்டம் ஆகும்.
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரையும், மதியம் 3.15 மணி முதல் 4.15 மணி வரை நல்ல நேரம் ஆகும். எனவே அமைச்சரவை மாற்றம் நல்ல நேரத்தில் தான் நடத்தப்படுகிறது. இதை பாஜக மற்றும் வலது சாரி அமைப்புகள் விமர்சிக்கின்றன. இதுகுறித்து பாஜகவினர், "ஏன் இந்த ராகு காலம், எமகண்டம் இருக்கிறபோது சனாதன ஒழிப்பு போராளி உதயநிதி பொறுப்பேற்க மாட்டாரா. கடவுள் மறுப்பு, நாடகம் எல்லாம் கட்சிக்காரர்களுக்குதான். ஊருக்கு மட்டும் தான் உபதேசம்." என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
அதற்கு திமுக தரப்பிலும் பதிலடி கொடுத்து வருகின்றனர். "ஆளுநரிடம் அமைச்சரவை மாற்றத்துக்கு மட்டும்தான் தமிழக அரசு கடிதம் வழங்கியது. ஒப்புதல் வழங்கி நேரம் ஒதுக்கியது ஆளுநர் அலுவலகம் தான். ஆளுநரின் நிகழ்ச்சி, முதல்வர் நிகழ்ச்சி இரண்டையும் ஆலோசித்து இந்த நேரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றிலும் மதத்தை திணிப்பது பாஜகவின் அரசியல்." என்று கூறியுள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications