எனக்கு ஒன்னு.. என் மகனுக்கு ஒன்னு.. வாரிசுகளுக்கு சீட் கேட்கும் திமுக அமைச்சர்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கும் பலரும் தங்களின் மகன்கள் மற்றம் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கேட்டு வருகின்றனர். அந்த அமைச்சர்கள் யார் யார்? யாருக்கு வாய்ப்பு கேட்கின்றனர்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். எப்படியாவது தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இதனால் ஆங்காங்கே தேர்தல் பொதுக்கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் என்று திமுக தனது தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தங்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த அமைச்சர்கள் யார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
துரைமுருகன்
இந்த லிஸ்ட்டில் முதலில் இருப்பவர் துரைமுருகன். திமுகவின் பொதுச்செயலாளாகவும், மூத்த அமைச்சராகவும் துரைமுருகன் உள்ளார். இந்த முறை திமுகவின் மிக மூத்த தலைவரான இவருக்கு வயது 87. வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 1996 முதல் எம்எல்ஏவாக உள்ளார்.
தற்போது அவர் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். இதனால் அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் ஓய்வு வழங்க திட்டமிட்டுள்ளராம். இதனால் துரைமுருகனுக்கு வரும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.
ஆனால் துரைமுருகனோ எப்படியாவது சீட் வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தனது மருமகளுக்கு சீட் வழங்க வேண்டும் என்றும் கூறி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே துரைமுருகன் மகம் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதி திமுக எம்பியாக உள்ள நிலையில் திமுக தலைமை தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
எவ வேலு
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் எவ வேலு. பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கிறார். திருவண்ணாமலை எம்எல்ஏவாக உள்ளார். இவர் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். குட்புக்கில் உள்ளார். இவர் தனது மகனுக்கு சீட் கேட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே தனது மகனுக்கு திருவண்ணாமலை சீட் கேட்ட நிலையில் திமுக மறுத்தது.
தற்போது சட்டசபை தேர்தலில் போட்டியிட மகனுக்கு சீட் கோரியுள்ளாராம் எவ வேலு. அதன்படி மூத்த மகன் கம்பன், திமுக மருத்துவர் அணி மாநிலதுணைத் தலைவராக இருக்கிறார். இவரைத்தான் தனது அரசியல் வாரிசாக அடையாளப்படுத்த அமைச்சர் எவ வேலு துடிக்கிறார். திமுக வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் மகன் கம்பனை போளூர் தொகுதியில் களமிறக்க ரெடியாகிறாராம் எவ வேலு.
எம்ஆர்கே பன்னீர் செல்வம்
அதேபோல் 3வது இடத்தில் இருப்பவர் விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம். இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். இவர் தனது மகன் கதிரவனை புவனகிரி அல்லது சிதம்பரம் தொகுதியில் களமிறக்க சீட் கேட்டுள்ளாதக கூறப்படுகிறது.
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
அதேபோல், 79 வயது நிரம்பிய வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்ந்திரன் தனக்கு மட்டுமின்றி தனது குடும்பத்தினர் ஒருவருக்கும் சீட் கேட்டு வருகிறார். கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தற்போது அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் தனது மகன் ரமேஷ்க்கு சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரி வருகிறார். சாத்தூர் தொகுதி என்பது கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் பழைய தொகுதி என்பதால் மகனை எளிதில் வெற்றி பெற வைக்கலாம் என்று அவர் கணக்குப்போடுகிறார்.
காந்தி - ரகுபதி
ராணிப்பேட்டை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருக்கும் காந்தி தனது மகன் வினோத்துக்கு சீட் கோரி வருகிறார். அதேபோல் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் தனது மகன் டாக்டர் அண்ணாமலைக்கு வாய்ப்பு கோரி வருகிறாராம். ரகுபதி தற்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் எம்எல்வாக உள்ளார்.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications