"ஜஸ்ட் பாஸ்?"... தட்டி தூக்க அதிமுக போட்ட ஸ்கெட்ச்.. "லிஸ்ட் எடுங்க".. ஸ்டாலின் போட்ட உத்தரவு
திமுக தரப்பின் அதிருப்தி வேட்பாளர்களை இழுக்க அதிமுக யோசிக்கிறதாம்
சென்னை: அதிமுக தலைமை ஒரு பிளான் போட்டால், அதை ஓவர்டேக் செய்து திமுக தலைமை இன்னொரு பிளான் செய்கிறது.. அப்படி ஒரு தகவல் கசிய தொடங்கி உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில், அதன் ரிசல்ட்டுக்காக தமிழகம் எதிர்நோக்கி வரும் நிலையில், திமுக தரப்பு ஜரூர் காரியங்களில் இறங்கி விட்டது.. அடுத்து நம்ம ஆட்சிதான் என்ற தெம்பில் பூரித்து போய் உள்ளது.. திமுக தலைமையோ, அதிகாரிகள், அமைச்சர்கள், தனி ஆலோசகர்கள் யார் யார் என்ற லிஸ்ட் எடுத்து வருகிறது.
அதேபோல அதிமுகவோ, சைலன்ட் மோடில் உள்ளது.. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வரை, உற்சாகமாக இருந்தவர்கள், வாக்குப்பதிவு அன்றே சுணங்கி போய் உள்ளனர்..

ரிப்போர்ட்கள்
வாக்குப்பதிவுக்கு பிறகு டிரான்ஸ்பர் ஆன ஓட்டுக்களை வைத்தும், அதன் நாலாபுறத்தில் இருந்து ரிப்போர்ட்களை வைத்தும் கதிகலங்கி போயுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 50 முதல் 80 சீட்டுக்கள் வரை மட்டுமே இடங்களை வெல்லக்கூடும் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது.. இந்த விஷயத்தையும் அதிமுக தலைமை பரிசீலித்து தான் வருகிறது..

அதிமுக
ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காமல், தொங்கு நிலைமை வந்துவிட்டால் என்ன செய்வது என்று அடுத்தக்கட்ட கவலையிலும் அதிமுக மேலிடம் மூழ்கி உள்ளதாம். எனவேதான், அதற்கும் ஒரு ஐடியாவை செய்துள்ளதாக கூறுகிறார்கள்.. அதாவது தேர்தலுக்காக செலவு செய்துவிட்டு, ஏகப்பட்ட பிரச்சனைகள், சிரமத்தில் இருக்கும் திமுக வேட்பாளர்கள் யார் என்று லிஸ்ட் எடுக்க சொல்லி உள்ளதாம்..

ஐடியா
ஒருவேளை இழுபறி ஆகிவிட்டால், அவர்களை உள்ளே இழுத்து போடும் முயற்சியில் இறங்கவே இப்படி ஒரு ஐடியாவாம்.. ஆனால், திமுக சும்மா விடுமா என்ன? இந்த விஷயம் அந்த கட்சியின் மேலிடத்துக்கு தெரிந்துவிட்டது.. பிறகு, யாரெல்லாம் அப்படி வேட்பாளர்கள் இருக்கிறார்கள், யாரெல்லாம் அதிருப்தியில் உள்ளனர், யாரெல்லாம் கட்சி தாவ யோசித்து வருபவர்கள் என்று அந்த வேட்பாளர்களின் லிஸ்ட்டை எடுக்க சொல்லி உள்ளதாம்.. அவர்களை கண்காணிக்கவும் சொல்லியிருக்கிறதாம்.. இதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை.. எனினும் பரபரப்பாக இப்படி தகவல் கசிந்து வருகிறது.

விஜயகாந்த்
இப்படித்தான், 4 நாளைக்கு முன்பு விஜயகாந்த், தன்னுடைய வேட்பாளர்களுக்கு பணத்தை செட்டில் செய்தார்.. என்னால யாரும் கஷ்டப்படக்கூடாது, நஷ்டமும் படக்கூடாது சரியா? என்று சொல்லி தேமுதிக வேட்பாளர்கள் தொகுதியில் செலவு செய்த பணத்தை தந்து, அவர்கள் வயிற்றில் பால் வார்த்தார்.. அந்த வகையில், திமுகவிலும் பணத்தை செலவு செய்து, நொந்து போயுள்ள வேட்பாளர்கள் இருக்கும் பட்சத்தில், இனி நன்மை ஏற்பட்டால் சரி... பார்ப்போம்...!












Click it and Unblock the Notifications