"200" கூட இல்லையாமே.. கடைசி ரிப்போர்ட் இதுதான்.. ஸ்டாலினின் கொடைக்கானல் டிரிப் சீக்ரெட்!
திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் பிகே தந்த கடைசி ரிப்போர்ட் என்ன
சென்னை: பிரசாந்த் கிஷோர் கடைசியாக திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் என்ன சொன்னார், ஸ்டாலினின் கொடைக்கானல் பயணத்துக்கான தெம்புக்கு பின்னணி என்ன என்ற காரணங்கள் வெளியாகி உள்ளது.
தேர்தல் முடிந்துவிட்டது.. ரிசல்ட்டுக்காக மக்கள் காத்து கொண்டுள்ளனர்.. அதிமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்புகள் வலுவாகி வருகின்றன.. ஒரு சத்தமும் இல்லாமல் அதிமுக கம்மென்று இருக்கிறது.
கடந்த வாரம் பிரசாந்த் கிஷோர் ரிப்பப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், "எல்லாம் நல்லபடியாக முடிந்தது.. தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக களமாடிய மொத்த கட்சிகளும் 50 தொகுதிகளில்கூட வெற்றிபெறாது.. திமுக அமோக வெற்றி பெறும்" என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

180+
பிரசாந்த் கிஷோர், திமுகவுடனான தன் அக்ரிமென்டை முடித்து கொண்டு, இங்கிருந்து கிளம்பி சென்ற பிறகு அளித்த பேட்டி இது என்றாலும், தமிழகத்தில் இருந்தபோதே அக்கட்சிக்கு 180+ என்றுதான் சொல்லி வந்தார்.. வாக்குப்பதிவுக்கு பிறகு இது 200+ ஆக உயர்ந்தது.. அதாவது, கூட்டணி 70-80 முதல் இடங்களை பெறுவதே சந்தேகம் என்பதே அதன் சாராம்சமாக இருந்தது.

பூத்கள்
எனினும், இந்த முறை ஐபேக் டீம் தந்த ரிப்போர்ட்கள்தான் திமுகவின் அடிமட்ட தொண்டர்களைகூட ஒருவித பூரிப்பிலேயே வைத்திருந்தது.. இப்போதும் அப்படியே வைத்துள்ளது.. இந்நிலையில், ஐபேக் டீம் ஸ்டாலினிடம் தந்த கடைசி ரிப்போர்ட் குறித்த தகவல் கசிந்துள்ளது.. அதன்படி, வாக்குப்பதிவு அன்றுகூட ஐபேக் டீம் சுற்றி சுழன்று வேலை பார்த்து, ஒரு ரிப்போர்ட்டை ரெடி செய்தது.. அதாவது ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு பூத்திலும் தன் ஆட்களை இறக்கி விட்டதாம் ஐபேக்.. அப்போது, திமுகவுக்கு ஓட்டுப் போடுபவர்கள் யார் யார் என்று குறித்து வைத்து கொள்வார்களாம்..

கணிப்புகள்
அதேபோல, ஓட்டு போட்டுவிட்டு வெளியே வருபவர்களிடம் மெல்ல பேச்சு தந்து அதன்மூலம் எக்ஸிட் போல் குறித்த கணிப்புகளையும் குறித்து வைத்து கொள்வார்களாம்.. சில முக்கிய வாக்குச்சாவடிகளில், "குறியீடு"களை கொண்டும், இந்த கணிப்பு போடப்பட்டுள்ளது.. இதைதவிர, கடந்த வாரம் மறுபடியும் ஒரு சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.. இப்படித்தான் அந்த கடைசி ரிப்போர்ட் தயாரானதாம்...இதைதான் ஸ்டாலினிடமும் தந்தாராம் பிரசாந்த் கிஷோர்..

கடைசி ரிப்போர்ட்
அதன்படி, திமுக கூட்டணிக்கு 205 இடங்கள் கிடைக்கும் என்று திமுக தலைவரிடம் சொல்லப்பட்டிருக்கிறது.. பல மூத்த அமைச்சர்களே, வெற்றியை பெறுவது கஷ்டம் என்றும், அதிமுக மிக குறைந்த அளவு தொகுதிகளிலேயே வெற்றி பெறும் வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.. இந்த கடைசி லிஸ்ட் பார்த்தபிறகே மிகுந்த தெம்புடன், ஸ்டாலின் கொடைக்கானல் கிளம்பி சென்றதாகவும், இதை அடிப்படையாக வைத்தே எதிர்கால வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications