என்னங்க இப்படி இறங்கிட்டீங்க.. இபிஎஸ் விட்ட சவால்.. ஒரே ஒரு போட்டோ போட்டு ஆஃப் செய்த திமுக எம்எல்ஏ!
சென்னை: திமுகவை சேர்ந்த திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் பகிர்ந்த ட்வீட்டர் போட்டோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் அவரின் வைரல் ட்வீட்டை ஷேர் செய்து வருகிறார்கள்.
Recommended Video
தமிழ்நாட்டில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது. 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி, தென்காசி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.

பிரச்சாரம்
ஒரு பக்கம் ஆளும் திமுக தரப்பு இந்த தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. பாமக அதிமுக கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலில் இடம்பெறவில்லை. இதனால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை அதிமுக எதிர்கொள்ள இருக்கிறது. தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். 9 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டமாக இன்றில் இருந்து சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.

என்ன சொன்னார்
இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி கட்சி கூட்டம் ஒன்றில் சேலத்தில் பேசினார். இதில் தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் வரும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தல் வர வாய்ப்புள்ளது. இதனால் அதிமுகவினர் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் கண்டிப்பாக தீவிரமாக உழைக்க வேண்டும். நிர்வாகிகள் எல்லோரும் தேனீக்கள் போல உழைக்க வேண்டும், அப்போதுதான் நாம் வெற்றிபெற முடியும் என்று சவால் விடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு இருந்தார்.

கிண்டல்
இந்த நிலையில் திமுக திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் இது தொடர்பாக மீம் ஒன்றை பகிர்ந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்துள்ளார். சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தில் நடிகர் மாறன் சொல்லும் பிரபல வசனத்தை குறிப்பிடாமல் அந்த மீமை மட்டும் வெளியிட்டு கிண்டல் செய்துள்ளார்.மாறன் சந்தானத்துடன் மருத்துவமனையில் இருந்து எஸ்கேப் ஆகும் அந்த மீம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இதைத்தான் அவரும் பகிர்ந்து இருக்கிறார்.

வைரல்
நெட்டிசன்கள் பலர் இதற்கு பதில் அளித்து உள்ளனர். அதில், என்ன சார் நீங்களும் மீம் போட தொடங்கிவிட்டீர்கள். நீங்களும் இப்படி இறங்கிவிட்டீர்கள் என்று கேட்டு உள்ளனர். இதற்கு அவர், இது நான் போட்ட மீம்தான். ஆனால் இது என் மகன் கொடுத்த ஐடியா என்று பதில் அளித்துள்ளார். இன்னும் சில நெட்டிசன்கள்.. இந்த மீமை நீங்கள் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்து போட்டு இருக்கலாம் என்று கேட்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் மீமர்கள் நீங்கள் இப்படி மீம் போட களமிறங்கிவிட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டு உள்ளனர்.
-
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications