“அமைச்சர்” கனவு.. காலில் விழுந்த திமுக எம்எல்ஏ! தட்டிவிட்ட ஸ்டாலின் -எல்லாமே வேஸ்டா போச்சே.. அப்செட்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் தனக்கும் இடம் கிடைத்துவிடும் என்ற கனவோடு முதலமைச்சர் முக ஸ்டாலின் காலில் விழுந்த திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரனும், தற்போதைய அமைச்சரவை மாற்றத்தால் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி எம்.எல்.ஏ. சா.மு.நாசரின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டிஆர் பாலு மகனும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.
11 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை அமைச்சரவைப் பதவியில் இருந்து ஆளுநர் விடுவித்து இருக்கிறார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
2021 சட்டசபைத் தேர்தலில் திமுக அதிக தொகுதிகளை வென்றது டெல்டா மண்டலத்தில்தான். ஆனால், ஒரு அந்த மண்டலத்தை சேர்ந்த ஒரு திமுக எம்.எல்.ஏ கூட அமைச்சராக்கப்படாதது அப்பகுதி மக்கள் மற்றும் திமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் அமைச்சரவை மாற்றத்தில் டெல்டாவை சேர்ந்த எம்.எல்.ஏவுக்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற பேச்சு அடிபட்டது.

இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 டெல்டா மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். அதில் குறிப்பாக திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் மகனும், 3 முறை மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏவுமான டிஆர்பி ராஜா பெயர், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் பெயர்கள் அதிகம் அடிபட்டன.
அதேபோல் 2 முறை பட்டுக்கோட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. கா.அண்ணாதுரை, திருவையாறு தொகுதியில் 5 முறை திமுக எம்.எல்.ஏவாக இருந்த துரை சந்திரசேகரன் போன்றோரும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தலைமையின் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் பெற எம்.எல்.ஏக்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளன்று எம்.எல்.ஏக்கள் வரிசையாக சென்று பரிசுப் பொருட்களை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும்போது, துரை சந்திரசேகரன் மட்டும் பரிசுப் பொருட்களை கொடுத்ததுடன், ஸ்டாலினின் காலிலும் விழுந்தார்.
இதனை விரும்பாத முதலமைச்சர் ஸ்டாலின், உடனே துரை சந்திரசேகரனை நோக்கி வேகமாக தட்டிவிட்டார். இந்த காட்சி அப்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கையை பெற்று அமைச்சர் பதிவியை பெறுவதற்காகவே துரை சந்திரசேகரன் அவ்வாறு செய்ததாகவும் விமர்சனங்கள் ஏழுந்தன.

இந்த நிலையில் டிஆர்பி ராஜா அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது துரை சந்திரசேகரனையும் அதிருப்தி அடைய செய்து இருக்கிறதாம். 1989, 1996, 2006, 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் வென்று திருவையாறு எம்.எல்.ஏவாகவும், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications