கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் உடல் நிலை மோசம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரேலா மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (61வயது) உடலி நலக்குறைவு காரணமாக ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 3ம் தேதி முதல் செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90 சதவீதம் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு ஆரம்பத்தில் கவலைக்கிடமான நிலையில் அன்பழகனின் உடல் நிலை இருந்தது.
அதன்பிறகு அடுத்த இரண்டு நாட்களில் உடல் நிலை தேறி 40 சதவீதம் அளவுக்கு ஆக்ஸிஜன் தேவை குறைந்தது. இதன் மூலம் வெண்டிலேட்டர் உதவி இல்லாமல் சுவாசிக்கும அளவுக்கு மெல்ல மீண்டு வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை முதல் உடல் நிலை கவலைக்கிடமான நிலைக்கு மாறி உள்ளது. இன்று காலையில் இருந்து மீண்டும் ஆக்ஸிஜன் தேவை அளவு அன்பழகனுக்கு அதிகரித்துள்ளது. ஜெ.அன்பழகனின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன. அவரது ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன.அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications