மழமழன்னு மா.சு.. மளமள முடியுடன் ஒரு தம்பி.. கலகலக்க வைத்த அக்கரைக்கு இக்கரை பச்சை!
திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணி தொண்டர் ஒருவருடன் எடுத்து கொண்ட போட்டோ வைரலாகிறது
Recommended Video

சென்னை: ரொம்ப கோவக்காரரோ.. டெரர் பேர்வழியோ.. என்று நினைப்பவர்கள்தான் கடைசியில் ஏகப்பட்ட ஹியூமர் சென்ஸ் இருப்பவர்களாக இருக்கிறார்கள்.. அந்த வகையில் மா.சுப்பிரமணியனும் ஒருவர்!
சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர். திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்.
சென்னை ஐகோர்ட் வக்கீல்! எப்போதும் படுசுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டே இருப்பவர் மா.சு.தான் என்ற பெயர் பெற்றவர். இவர் மேயராக இருந்தபோது பல செயல்பாடுகள் சென்னையின் கவனத்தை ஈர்த்தது.

மாரத்தான்
இவருக்கு 20 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. ஆனால் மாரத்தான் போட்டிகளில் வருடந்தோறும் தவறாமல் கலந்துகொள்வதுடன், பல கிலோமீட்டர்கள் ஓடி உலகளவு சாதனை பெற்றவர்களில் சுப்பிரமணியனும் ஒருவர்!

செல்பி
இப்போது விஷயம் என்னவென்றால், மா.சு.விடம் ஒரு இளைஞர் செல்பி எடுக்க வந்திருக்கிறார் போலும். மா.சு.வின் மண்டையோ முழு வழுக்கை! ஆனால் செல்பி எடுத்து கொண்டவருக்கு மண்டை எங்கே என்றே தெரியவில்லை. கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பாரே, "அது என்ன தலையில ஒரு கீரிப்பிள்ளை படுத்திருக்குன்னு.." அந்த மாதிரிதான்.. இவர்தலையில் ஒரு முள்ளம்பன்றியே படுத்திருப்பது மாதிரி இருக்கு.
|
பெப்ரப்பே
அதுவும் அந்த முடி அடங்கி ஒடுங்கி இருந்தால்கூட பரவாயில்லை.. "பெப்பரப்பே" என்று விரித்து நின்று, பக்கத்திலிருந்த மா.சு.வின் மண்டையையே குத்தும் அளவுக்கு இருந்தது. இந்த போட்டோவைதான் மா.சு தன் ட்வீட்டில் "அக்கரைக்கு இக்கரை பச்சை" என்று ஒத்தை வரியில் பதிவிட்டுள்ளார்.
|
சின்னம்
ஆனால் கமெண்ட்டுகளோ இதற்கு குவிந்து வருகிறது. "முன்னாடி நீங்க நின்னு பின்னாடி அந்த தம்பி நின்னா உதய சூரியன் சின்னம் வரும்" என்று முதல் கமெண்ட்டே அசத்துகிறது.
|
சொன்னீங்களா
"அண்ணா, வெக்கப்படாம சொல்லுங்க, .. சின்ன வயசுல உன்ன மாதிரிதாம்பா எனக்கும் இருந்துச்சுன்னு சொன்னீங்களா இல்லையா!!!!???. என்கிறது இன்னொரு கமெண்ட்.












Click it and Unblock the Notifications