"ஆக்டிவாக ஓடிட்டே இருப்பாரே".. மா.சுப்பிரமணியத்தையும் தொற்றிய கொரோனா.. மனைவிக்கும் பாதிப்பு
திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது
சென்னை: எப்போதுமே ஆக்டிவ்-ஆக இயங்கி கொண்டும், படு சுறுசுறுப்பாக ஓடி கொண்டும் இருக்கும்.. சென்னை முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.. கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள், டாக்டர்கள், அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் என எல்லோருக்குமே பாகுபாடு இன்றி தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை சென்னை மாநகர மேயராக இருந்தவர் மா.சுப்பிரமணியம்.. சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த சமயம் முதல் தற்போது வரை இவர் செய்து வரும் நிவாரண பணிகள் அளப்பரியது.. காரைக்குடியில் கொரோனா தொற்று உறுதியான சென்னைவாசிகளின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவிகள் செய்ய ஏற்பாடு செய்தவர்.
மாநில அரசு தொற்று விஷயத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை அடிக்கடி குற்றஞ்சாட்டி கொண்டே இருந்தார்.. தீவிர சிகிச்சை பிரிவில் ஸ்பெஷல் டாக்டர்களை நியமிக்கப்படாததுதான், தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது.. பிளீச்சிங் பவுடர், தெர்மல் ஸ்கேனர் வாங்கும்போதுகூட அதில் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. மக்கள் உயிரோடு விளையாடுகிறார்கள்" என்று எச்சரித்து கொண்டே இருந்தார்.
சென்னை தெற்கு மாவட்ட செயலாளரான இவர், சென்னை ஐகோர்ட் வக்கீல் ஆவார்.. எப்போதும் படுசுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டே இருப்பவர் மா.சு.தான்.. இவருக்கு 20 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. ஆனால் மாரத்தான் போட்டிகளில் வருடந்தோறும் தவறாமல் கலந்துகொள்வதுடன், பல கிலோமீட்டர்கள் ஓடி உலகளவு சாதனை பெற்றவர்களில் சுப்பிரமணியனும் ஒருவர்!
எப்போதுமே தன் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வார்.. இவருக்கு எப்படி தொற்று பரவியது என்றுதான் தெரியவில்லை.. இவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.. இருவருமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. மா.சுப்பிரமணியத்துக்கு தொற்று உறுதியாகி உள்ளது திமுகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications