மார்க்கண்டேயன் திமுக எம்எல்ஏ ஜாமீன் வழக்கில் காரசார வாதம்.. நீதிபதி சொன்ன அந்த ஒரு கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.. இந்த மனு மீதான தீர்ப்பை சென்னை ஹைகோர்ட் இன்று ஒத்திவைத்துள்ளது. என்ன நடந்தது இன்று நீதிமன்றத்தில்?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எதிராக அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Markandeyan DMK Vilathikulam MLA Markandeyan Arrest News

விளாத்திகுளம் எம்எல்ஏ

"சட்டமன்றக் கதவுகளை பூட்டினால், உள்ளே எலும்புகள் உடைக்கப்படும்" என்ற அவரது பேச்சு அரசியல் சர்ச்சையை உருவாக்கி விட்டது.. இதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றி பெற்ற கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த ஜூலை 20ம் தேதி அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிலேயே போலீசார் மார்க்கண்டேயனை அதிரடியாக கைது செய்து, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

மார்க்கண்டேயன் கைது ரத்தாகுமா

இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்த காவலில் எடுத்து விசாரணை நடத்தும் மனுவையும், மார்க்கண்டேயன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் தூத்துக்குடி உள்ளூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து, தன்னைச ஜெயிலில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மார்க்கண்டேயன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் முன்வைத்த வாதத்தில், "முதல்வர் பேசிய கருத்திற்கு பதிலளிக்கும் விதமாகவே மனுதாரர் பேசினாரே தவிர, பொது அமைதியைக் கெடுக்கும் எண்ணமோ அல்லது முதல்வரை அச்சுறுத்தும் உள்நோக்கமோ அவருக்கு இல்லை.

வில்சன் முன்வைத்த வாதம்

7 வருடங்களுக்கு குறைவான தண்டனைக்குரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும்போது, BNS பிரிவு 35(3)-ன் படி முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்ற விதியைத் தூத்துக்குடி காவல்துறையினர் முற்றிலும் புறக்கணித்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை விடியற்காலையில் குற்றவாளியை போல கைது செய்தது சட்டவிரோதமானது... இதைத் தூத்துக்குடி நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது என்றெல்லாம் வாதிடப்பட்டது.

இன்று ஹைகோர்ட் ஜாமீன் தருமா

எனினும், வழக்கு விசாரணையில் மார்க்கண்டேயன் தரப்பு வாதங்கள் முழுமையாக முடிவடையாத நிலையில், இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இன்றைக்கு, அதாவது ஜூலை 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் கைது உத்தரவை எதிர்த்த இந்த முக்கிய மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதால், மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கப்படுமா, இல்லையா என்பது இன்று தெரியவரும் என்பதால், இந்த வழக்கில் பெரும் பரபரப்பு நிலவியது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், "கைதுக்கான காரணங்கள் எதுவும் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை மற்றும் புகாரின் உண்மைத்தன்மை குறித்து எவ்வித ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை.

அரசியல் ரீதியிலான பேச்சுக்கள் தொடர்பான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் முன் பெறப்பட வேண்டிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் ஒப்புதலும் பெறப்படவில்லை. சட்டமன்றம் பூட்டப்படும் என்ற பேச்சுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் பேசினாரே தவிர, அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால் மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்" என்றார்,

இதற்குப் பதிலளித்த காவல் துறை தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், "சட்டமன்றத்தைப் பூட்டினால் எலும்பை உடைத்துவிட்டுத்தான் அனுப்பவேண்டுமென பொதுவெளியில் பேசிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன. கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, அதில் அவரது கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியாவில் வைரலான இப்பேச்சால் அவர் மீண்டும் இதேபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடும் என்பதால், மாஜிஸ்திரேட் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பிறகே சட்டப்பூர்வமாக சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளார்" என வாதிட்டார்.

இந்த 2 தரப்பு காரசார வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், யூகங்களின் அடிப்படையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்தப்படுவதாகக் கூறி, இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+