"விஜய்க்கு பதில் சொல்லும் வகையில் தான் மார்க்கண்டேயன் பேசினார்".. கோர்ட்டில் பி.வில்சன் வைத்த வாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், "ட்டப்பேரவை பூட்டப்படும் எனக் கூறிய முதல்வர் விஜய்க்கு பதிலளிக்கும் வகையில்தான் மார்க்கண்டேயன் பேசினார். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பேசவில்லை" என வாதம் முன்வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி அதிகாலையில் விளாத்திகுளத்தில் அவரது வீட்டில் வைத்து போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்தனர்.

DMK MLA Markandeyan Jail Case Speech Was Response to CM s Statement Court Told

தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நீதிபதி சுமதி முன் முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஜீ.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீன் கோரி மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கட்கிழமை (நேற்று) விசாரணைக்கு வந்தபோது, எம்எல்ஏ மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "சட்டப்பேரவை பூட்டப்படும் எனக் கூறிய முதல்வர் விஜய்க்கு பதிலளிக்கும் வகையில்தான் மார்க்கண்டேயன் பேசினார். கைதுக்கான காரணங்களை தெரிவிக்காதது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்பதால், மனுதாரரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்து தூத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.

கைதுக்கு முன் விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். ஆனால், எந்த நோட்டீஸும் வழங்கப்படவில்லை. ஜூலை 18 ஆம் தேதி நடந்த சம்பவத்துக்கு 19 ஆம் தேதி நள்ளிரவில் புகார் அளிக்கப்பட்டு, 20 ஆம் தேதி அதிகாலை வழக்குப் பதிவு செய்து, அன்றைய தினம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பேசவில்லை" என வாதிட்டார்.

வாதங்கள் முடிவடையாததை அடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி இளந்திரையன் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைத்தார். அதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று (ஜூலை 28) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+