அறியாமல் பேசிட்டேன் மறந்துடுங்கள்! விஜய்யின் எலும்பை உடைப்பதாக சொன்ன மார்க்கண்டேயன் திடீர் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என நான் அறியாமல் பேசியதை மறந்துவிடுங்கள் என விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கடந்த இரு நாட்களாக தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 5ஆம் தேதி பொது பட்ஜெட்டும் 6ஆம் தேதியான நேற்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

DMK MLA Markandeyan

இதையடுத்து இன்றைய தினம் பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின் போது விளாத்திக்குளம் திமுக மார்க்கண்டேயன் பேசினார். இவர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய போது சட்டசபையில் முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என தெரிவித்திருந்தார். இதற்காக அவர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்தார்.

இந்த பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அவர் கூறியிருப்பதாவது: இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் போதிய திட்டங்கள் வழங்கப்படவில்லை.

டிஏபி மற்றும் யூரியா போன்ற உரங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் கூட ஆடு, மாடுகளின் சாணத்தில் இருந்து பெறும் உரங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதற்காக பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மாற்றங்களை கொண்டு வருவோம் என ஆட்சியை பிடித்தவர்கள் பெயர்களை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். மாடித் தோட்டம் பூந்தோட்டமாகவும் அவகேடோ பழம் பட்டர்ஃப்ரூட்டாகவும் பெயர் மாற்றம் மட்டுமே பெற்றுள்ளது.

மாணவிகள் உயர் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படுவதை பெருமிதத்துடன் குறிப்பிட்டேன். திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்கள் ஏழை மாணவர்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளுக்குமே செலவிடப்பட்டது.

நான் முதல்வரை விமர்சித்தது அறியாமல் வந்த வார்த்தை, "நீங்கள் முதல்வரை இந்த அளவிற்கு பேசியிருக்கக் கூடாது" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இந்த அவையின் கதவு பூட்டப்படும் என சொன்ன போது அறியாமல் வந்த வார்த்தைகளுக்கு நீங்கள் அருள் கூர்ந்து மறந்துவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அது போல் முதல்வர் விஜய்யை அப்படி பேசியிருக்கக் கூடாது என மு.க.ஸ்டாலினும் அறிவுறுத்தியிருந்தார். எனவே நான் அப்படி பேசியதை மறந்துவிடுங்கள் என மார்க்கண்டேயன் தெரிவித்தார். எனினும் மார்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள், கடிதம் கொடுத்திருப்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். இதற்கு எ.வ.வேலு பேசுகையில், உரிமை மீறல் அளவுக்கு இந்த பிரச்சனையை கொண்டு போக வேண்டாம். ஒரு பொது கூட்டத்தில் உணர்ச்சியின் மிகுதியில் அவர் அவ்வாறு பேசிவிட்டார் என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+