Sekar Babu: திருத்தணி கோயிலில் சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்.. மலை மீது அனுமதிக்க போலீசார் மறுத்ததால் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த அறநிலையத்துறை முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏவுமான சேகர்பாபுவின் காரை அடிவாரத்தில் போலீசார் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அனுமதி மறுத்ததால் டென்ஷன் ஆன சேகர்பாபு, காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர் அதிகாரிகளுடன் பேசிய பிறகு ஒரு வழியாக சேகர்பாபு காரை மலை மேல் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக திருத்தணி உள்ளது. ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை விழா இந்த கோயிலில் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை விழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. ஆடிக்கிருத்திகைக்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அன்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.

DMK MLA Sekar Babu car stopped at Tiruttani temple police refuse permission to proceed up the hill

காரை தடுத்து நிறுத்திய போலீசார்

இதனால் திருத்தணி முழுவதும் பக்தர்கள் கூட்டமாக தென்பட்டது. ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி மலைக்கோவில் மேல் வாகனங்கள் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மலைக்கோவில் மேல் செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் கார் பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று சாமி தரிசனத்திற்கு வந்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் காரை மலைப்பாதை நுழைவு பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போலீசாருடன் சேகர் பாபு வாக்குவாதம்

அவரை மேற்கொண்டு செல்ல விடாமல் காரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், சேகர் பாபுவுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேகர் பாபுவும் பயங்கர அப்செட் ஆனார். கோயில் நிர்வாகத்தின் கார் பாஸ் மற்றும் எம்எல்ஏ பாஸ் வைத்திருந்தும் ஏன் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கிறீர்கள் என சேகர் பாபு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு சேகர் பாபுவின் காரை மலை மேல் செல்ல அனுமதித்தனர். இதையடுத்து சேகர் பாபு குடும்பத்தினருடன் சென்று திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரும் எம்.எல்.ஏவுமான சேகர் பாபுவை போலீசார் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்தது தொடபான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

களைகட்டிய திருத்தணி

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டதுடன் பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டது. ஆடிக்கிருத்திகை முக்கிய நிகழ்வாக மாலையில் நடைப்பெற்ற தெப்பத் திருவிழாவில், மலைக்கோவில் காவடி மண்டபத்தில் இருந்து உற்சவர், வள்ளி, தெய்வானை சமேதராய் தேர் வீதியில் வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

உள்ளூர் விடுமுறை

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், குடிநீர் கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. பக்தர்கள் மலையாடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை திருக்குளத்தில் புனித நீராடிவிட்டு படிகள் வழியாக பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடிகளுடன் அலகு குத்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா அரோகரா என்று பக்தி கோஷத்துடன் மலைக்கோவிலுக்கு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+