மிஸ்டர் குப்புசாமி மகன்..420 மலை! தலைமை பொய்யர் இப்ப பேசுவாரா? நான் அப்பவே சொன்னேன் -டிஆர்பி காட்டம்
“தன்னை தானே தலைவர் என்று அறிவித்துக் கொண்டவரிடம் எந்த வகையிலும் உண்மையை பேசுவதற்கான சாயலே இல்லை.”
பெங்களூரு - மைசூரு இடையில் அமைக்கப்பட்டு இருக்கும் 6 வழிச்சாலையை அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 10 வழிச்சாலை என்று அறிவித்து இருப்பதை விமர்சித்து இருக்கும் திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதுபற்றி பேசுவாரா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஒரு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற நிலையில், அங்கு மத்திய பாஜக அரசு அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை அறிவித்து, திறப்பு விழாக்களை நடத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் கர்நாடகாவில் புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நிலையில், நேற்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்க பெங்களூரு வந்தார். இது இந்த ஆண்டில் பிரதமர் மோடியின் 5 வது கர்நாடக பயணமாகும்.

பெங்களூரு - மைசூரு சாலை
நேற்று காலை பெங்களூருவுக்கு தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடி ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக பெங்களூர் - மைசூரு இடையிலான 6 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 118 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலை ரூ.8,480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது,

5 ஆண்டுகள் கழித்து தொடக்கம்
கர்நாடகாவின் 2 முக்கிய நகரங்களான பெங்களூரு மைசூரு இடையே சாலை மார்க்கமாக செல்ல சுமார் 3 மணி நேரம் ஆகும் நிலையில், அந்த நேரத்தை குறைக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக தேர்தல் நடைபெற்ற ஆண்டில் இந்த சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. 5 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தேர்தலுக்கு முன் இது திறக்கப்பட்டு உள்ளது.

10 வழி சாலையா?
இதன் காரணமாக பெங்களூரு - மைசூரு இடையே பணிக்கும் நேரம் 75 நிமிடங்கள் வரை குறையும் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த சாலையில் டிரோன் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இதனை 10 வழி சாலை என்று குறிப்பிட்டு இருந்தார்.

6 வழிதானே இருக்கிறது
அப்போது பாஜகவினரும், ஊடகங்களும் இதனை 10 வழிச்சாலை என்றே குறிப்பிட்டனர். ஆனால், எதிர்க்கட்சிகள் இது 6 வழிச்சாலைதான் எனவும் தவறான தகவலை கர்நாடக முதலமைச்சர் பரப்புவதாக தெரிவித்து வந்தார்கள். குறிப்பாக திமுக எம்.பி டிஆர்பி ராஜா பிப்ரவரி 13 ஆம் தேதி பசவராஜ் பொம்மை தவறான தகவலை வெளியிட்டு உள்ளதாக ட்விட்டரில் விமர்சித்தார்.

நெடுஞ்சாலைத் துறை அழைப்பிதழ்
ஆனால், டிஆர்பி ராஜாவை பலரும் அப்போது விமர்சித்ததுடன், சர்வீஸ் சாலையை சேர்த்து 10 வழிச்சாலை என்று விளக்கமளித்தனர். இந்த நிலையில் சாலை திறப்பு விழாவுக்காக மத்திய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்டு இருக்கும் அழைப்பிதழில் 6 வழிச் சாலை என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.

அண்ணாமலையை சாடிய டிஆர்பி ராஜா
இதனை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் டிஆர்பி ராஜா, "மிஸ்டர் குப்புசாமியின் மகன் தலைமை பொய்யர் 420 மலை வாய் திறந்து 40% நிலம் குறித்து பொய் சொன்னதை ஏற்றுக்கொள்வாரா? தன்னை தானே தலைவர் என்று அறிவித்துக் கொண்டவரிடம் எந்த வகையிலும் உண்மையை பேசுவதற்கான சாயலே இல்லை." என்று சாடி இருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications