ராத்திரி 8 மணிக்குள்ள உடைச்சிருங்க.. இல்லாட்டி போலீஸ் பிடிச்சிரும்.. கலகல டிஆர்பி ராஜா வீடியோ

திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜாவின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டிஆர்பி ராஜா வெளியிட்ட கலகல வீடியோ

    சென்னை: அண்ணனுக்கு ஒரு பிரச்சனைன்னு வந்துட்டா எப்படியெல்லாம் விசுவாசிகள் ஆதரவு தர்றாங்க பாருங்க.

    நபர் 1: அண்ணே... எப்படியாவது ராத்திரி 8 மணிக்குள்ள உடைச்சிடுங்க... இல்லாட்டி போலீஸ் பிடிச்சிரும்
    நபர் 2: சட்டசபைக்கு இதை எடுத்துக்கிட்டு போனா மண்டையை உடைச்சிடலாம்
    நபர் 3: எப்படியாவது மிக்சியில அடிச்சாவது கலந்து குடிச்சிடுங்கண்ணே...
    நபர் 4: அண்ணே... உங்களுக்கு இந்த நிலைமையா?
    நபர் 5: அண்ணனுக்கு ஒரு சுத்தியல் பார்சல்

    இதெல்லாம் என்ன தெரியுமா? இவர்கள் எல்லாம் எதை பற்றி பேசுகிறார்கள் தெரியுமா? ஒரு பாதுஷாவை பற்றிதான். ஆமாம். திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சமாச்சாரத்தை ஷேர் செய்திருக்கிறார்.

     ஏடாகூடம் ஆன பாதுஷா

    ஏடாகூடம் ஆன பாதுஷா

    தீபாவளிக்கு அவங்க வீட்டில அவர் மனைவி பாதுஷா செய்திருக்காங்க. சுட்ட பாதுஷாவில் ஒன்றை கொண்டு வந்து இவர்கிட்ட தந்து சாப்பிட சொல்லிவிட்டு போய் இருக்காங்க. ஆசை ஆசையாக தந்த ஒரு பாதுஷாவை சாப்பிட எடுத்தார் டிஆர்பி ராஜா. ஆனால் மனைவி செய்த பாதுஷா கொஞ்சம் ஏடாகூடம் ஆயிடுச்சு போல.

     ட்விட்டர் பதிவு

    ட்விட்டர் பதிவு

    மனுஷன் அதை உடைக்கிறதுக்குள்ள படாத பாடு பட்டுட்டார். தான் பட்ட பாட்டை ட்விட்டரிலும் பதவிட்டுள்ளார் வீடியோ வடிவில். பாதுஷாவை சாப்பிடதான் முடியல... நீங்களாவது பாருங்கன்னு நினைச்சு அந்த பாதுஷாவை வீடியோ எடுத்து அனுப்பியிருக்கிறார். கூடவே ஒரு பதிவு இப்படி இருக்கிறது. அது " இந்த தீபாவளி வந்தாலே ரெண்டு டார்ச்சர். 1. வெட்டி ஷாப்பிங் / வெடி. 2. பலகாரம் செய்றேன்னு சொல்லிட்டு பொண்டாட்டி பண்ற டார்ச்சர்!!

    உடைக்க முடியல

    பாதுஷா செய்றேன்னு சொன்னாங்க. நேத்து வந்து பாத்தா மினி Mysore sandal soap மாதிரி ஒரு கின்னத்ல குடுத்தாங்க. இன்னைக்கு காலைல வரைக்கும் அத ஒடைக்க #முடியல" என்று சோகத்துடனும் பாதுஷாவை சாப்பிட முடியாத ஆதங்கத்துடனும் பதிவிட்டிருந்தார்.

     ருசியாக உள்ளன

    ருசியாக உள்ளன

    இந்த பதிவிற்குதான் மேற்கூறியவர்களின் கமெண்ட்கள் உட்பட பல வந்து கொண்டே இருக்கின்றன. கடைசிவரை பாதுஷாவை சாப்பிட முடியாவிட்டாலும் கமெண்ட்டுகளை படிக்கும்போது பாதுஷாவைவிட ருசியாகவே இருக்கின்றன!!

    கரூர் ஜோதிமணி கோரிக்கை

    இதெல்லாம் ரொம்ப டூமச். நல்லதா நீங்களே பண்ண வேண்டியதுதானே. யார் தடுத்தாங்க.

    மண்டையை உடைக்கலாம் போலயே

    பாதுஷாவே இப்பிடினா மைசூா்பாக்குலாம் சட்டசபைக்கு எடுத்துனு போனா எடப்பாடி மன்டைய ஒடச்சிடலாமே ப்ரோ

    அடில கொடுத்து உடைக்கிறேன்

    எனக்கு மஹான் கவுண்டமணி , ஞாபகம் வந்துட்டு , நான் கொஞ்சம் விவரம்மானவங்க , ஊர்ல ரோடு போடுற மெஷின் வந்துருக்கு , அதுல அடில கொடுத்து உடைச்சிக்குறேன் !

    பாராட்டுங்கள்

    பலகாரம் செய்ய முயற்சிப்பதே பெரிய விசயம்.
    அவர்களின் முயற்சிக்கு ஊக்கம் தந்து பாராட்டுங்கள்

    இது அண்ணியின் அன்பு

    அண்ணியோட அன்பு மாதிரி இந்த பாதுஷா இருக்கு, இத கூட புரிஞ்சுக்க கூட முடியாம.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+