பிராமணர்களுக்கு எஸ்வி சேகர் வைத்த கோரிக்கை.. படு சூப்பராக சமாளித்த திமுக.. பதிலடி கொடுத்த மா.சு.!

எஸ்வி சேகருக்கு மா.சுப்பிரமணி பதிலடி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உப்பு போட்டு சாப்பாடு சாப்பிடற பிராமணரா இருந்தால்..." என்று எஸ்வி சேகர் வீடியோ மூலம் ஒரு கோரிக்கை வைக்க.. அதை இன்னொரு வீடியோ பதிவிட்டு தூள் தூளாக உடைத்தெறிந்துள்ளார் திமுகவின் மா.சுப்பிரமணி! இப்படி ஒரு களைகட்டும் வீடியோக்களை தன்னுடைய ட்விட்டரில் எம்எல்ஏ டிஆர்பி ராஜா பதிவிட்டு கமெண்ட்களை அள்ளி வருகிறார்!!

திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா எதையாவது வித்தியாசமான ட்வீட்களை அடிக்கடி பதிவிடுவார்.. இவரது ட்வீட்களுக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும்.

இப்போதும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அது எதை பற்றியது என்றால் திமுக தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சம்பந்தப்பட்டது.. பொதுவாக, முக ஸ்டாலினுக்கு பிறந்த நாள் என்றால், பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோலப்போட்டி, கிரிக்கெட் போட்டி, பொதுக்கூட்டம் இப்படி நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

முன்னாள் மேயர்

முன்னாள் மேயர்

அந்த வகையில், முன்னாள் மேயரும் திமுக எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியம் இந்த விழாக்களை தவறாமல் செய்து வருபவர்.. இந்த வருடமும் நங்கநல்லூர் பகுதியில் முக ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கோலப்போட்டியை நடத்தி உள்ளார்.. இதுகுறித்த அறிவிப்பு வெளியானதுமே பாஜகவின் ஆதரவாளர் எஸ்வி சேகர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

எஸ்வி சேகர்

எஸ்வி சேகர்

அந்த வீடியோவில் எஸ்வி சேகர் பேசும்போது, "உப்புப் போட்டு சாப்பாடு சாப்பிடற பிராமணரா இருந்தால், நங்கநல்லூரில் மானமுள்ள சகோதர சகோதரிகள் யாராக இருந்தாலும்... இந்த கோலப்போட்டியில் யாருமே கலந்துக்காதீங்க" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோவுக்கு மா.சுப்பிரமணயிம் பதிலளித்து மற்றொரு வீடியோ பதிவிட்டுள்ளர்.. அந்த வீடியோவில் மா.சு. பேசியதாவது:

மா.சுப்பிரமணி

மா.சுப்பிரமணி

"அன்பிற்கினிய திரு.எஸ்வி சேகர் அவர்களுக்கு வணக்கம்.. நேத்தைக்கு நீங்க சமூகவலைதளங்களில் ஒரு செய்தி போட்டிருந்தீங்க.. நங்கநல்லூரில் வசிக்கும் பிராமண பெண்கள் யாரும், திமுக நடத்துற கோலப்போட்டியில் பிராமண தாய்மார்கள் யாரும் கலந்துக்க வேணாம் என்பது மாதிரி வேண்டுகோள் விடுத்திருந்தீங்க.

கருணாநிதி

ஆனால், கடந்த நாலைந்து வருஷமா அந்த இடத்துல நடந்த கோலப்போட்டியில் வெறும் 200-க்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டு வந்தனர்.. ஆனால், இந்த வருஷம், நீங்க வேண்டுகோள் விடுத்த பிறகு 318 பிராமண தாய்மார்கள் கோலப் போட்டியில் கலந்து கொண்டு கோலம் போட்டிருக்காங்க.. இங்க நங்கநல்லூரில் வசிக்கும் எல்லாருக்குமே தெரியுமே, நங்கநல்லூரின் வளர்ச்சி என்பது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கழக தலைவர் வணக்கத்திற்குரிய தளபதி ஆகியோரின் தீவிர முயற்சியினால்தான் கிடைத்தது என்பது!

டிஆர்பி ராஜா

டிஆர்பி ராஜா

கழக தலைவர் தளபதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூற, அந்த நிகழ்ச்சியில்தான் 318 பேரும் பங்கெடுத்துள்ளனர்.. நிச்சயமா இந்த எண்ணிக்கை பெருக நீங்கதான் காரணம்,, இன்னும் பேசுங்க.. இது ஆயிரக்கணக்கில் பெருகும்... நன்றி.. வணக்கம்!" என்று கூறியிருந்தார். இந்த வீடியோவைதான் டிஆர்பி ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதுதான் திமுக

இதுதான் திமுக

அத்துடன், "இது தான் #திமுக.. அற்புதமான தரமான கண்ணியமான பதிலடி யாதெனில் ... Masterstroke by our ex mayor @Subramanian_maAnna #தலைவர் @mkstalinஅவர்களின் தடம் பிறழா நிதானமிக்க போர்ப்படை வீரன் அண்ணன் மா.சு. அவர்கள் #DmkCares #பொய்பெட்டி" என்றும் எஸ்விசேகருக்கு இன்னொரு பதிலடியை தந்துள்ளார். டிஆர்பி ராஜா ட்விட்டருக்குள் நுழைந்தாலே கமெண்ட்கள் தெறித்து வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன..

எஸ்வி சேகர்

எஸ்வி சேகர்

"சாதாரணமா ரிலீஸ் ஆகி ஓடுற திரைப்படத்தை சூப்பர் ஹிட்டாக்கிற கோஷ்டிதான் எச்.ராசா கோஷ்டி. இப்போ எஸ்வி சேகர் மாவட்ட செயலாளர் மாசுவுக்கு விளம்பர பிஆர்ஓ ஆனதில் மகிழ்ச்சி... தொடர்ந்து சேகரின் பணி இது போன்றே நடக்கட்டும்" என்றும், "திரு.S.ve.சேகர் உங்கள மாதிரியே எல்லாரையும் உப்பு போட்டு சாப்பிடாதவாள்னு நினைச்சுட்டீங்களா" என்றும் மாறி மாறி எஸ்வி சேகரை வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+