அன்று ஸ்டாலின், இன்று உதயநிதி! டிவி நிகழ்ச்சியில் பெரியாராக நடித்து சாம்பியனான சிறுவனுக்கு வாழ்த்து
சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறுவர்களுக்கான போட்டியில் பெரியாரின் பகுத்தறிவு வசனங்களை பேசி மக்களை கவர்ந்த சிறுவர்களை நேரில் அழைத்து வாழ்த்திய திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெரியார் சிலையை பரிசாக வழங்கினார்.
தனியார் தொலைக்காட்சியில் சிறுவர்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறுவர்கள் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியைபோல் வேடமிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு செயல்பாட்டை விமர்சித்து நடித்துக் காட்டினர்.

மக்கள் பாராட்டு; பாஜக எதிர்ப்பு
தொலைக்காட்சியில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் வைரலான அந்த வீடியோ அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறுவர்களின் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். டிவி நிகழ்ச்சி குறித்து மத்திய அமைச்சர் கேட்டறிந்ததாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசு நோட்டீஸ்
அண்ணாமலையின் இந்த பேச்சு கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டினர். தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் சிறுவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் தனியார் தொலைக்காட்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றைய அனுப்பியது.

பெரியார் வேடமிட்ட சிறுவன்
இந்த நிலையில், சில வாரங்கள் கழித்து அதே நிகழ்ச்சியில் சிறுவன் இளந்தமிழ் பெரியார் வேடமணிந்து பெரியாரின் பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவை குறித்த பகுத்தறிவு வசனங்களை அனல் பறக்க பேசினார். அதில், "கடவுள் மறுப்பு என்பது எனது கொள்கையே இல்லை. எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே எனது கொள்கை" என பேசியது பட்டி தொட்டியெங்கும் டிரெண்டானது.

முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
இதனை தொடர்ந்து தந்தை பெரியார் நாடகத்தில் பெரியார் வேடமணிந்த சிறுவன் இளந்தமிழ் மற்றும் இதர கதாபாத்திரங்களில் நடித்த சிறுவர்களையும், குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன் அவர்களை நேரில் வசனம் பேச சொல்லி கேட்டு மகிழ்ந்த முதலமைச்சர் அவர்களுக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார்.

முதல் வென்ற இளந்தமிழுக்கு உதயநிதி பாராட்டு
இதனால் பெரும் வரவேற்பை பெற்ற அந்த டிவி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் சிறுவன் இளந்தமிழ் முதல் பரிசு வென்றுள்ளார். அவரை திமுக இளைஞரணி தலைவரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்டு நடித்து கவனம் ஈர்த்து, இறுதி போட்டியில் முதல் பரிசையும் வென்ற சிறுவன் இளந்தமிழையும், குடும்பத்தார்-குழுவினரையும் வாழ்த்தினேன். இளந்தமிழுக்கு பெரியார் சிலையை பரிசளித்து மகிழ்ந்தேன்." என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications