தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடிப்பதா? அ.தி.மு.க. மீது 'முரசொலி' பாய்ச்சல்
சென்னை: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. அப்படியே காப்பி அடித்துள்ளதாக அ.தி.மு.க.வை கடுமையாக சாடியுள்ளது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி.

முரசொலி நாளிதழில் இன்று எழுதப்பட்டுள்ள தலையங்கம்:
- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது அ.தி.மு.க.
- பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம்.
- மகப்பேறு கால விடுப்பு ஓராண்டு.
- மகளிருக்கு பேருந்து பயணச் சலுகை திட்டம். (தி.மு.க. அறிவித்ததுகட்டணமில்லா பயணம்!)
- மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீட்டு முறை.
- முதியோர் உதவித் தொகை உயர்வு.
- 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்வு.
- விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்.
- மகளிருக்கு 1500 ரூபாய் உதவித்தொகை.
- கல்விக்கடன் தள்ளுபடி

- 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்.
- வெளிநாடு வாழ் தமிழர்க்கு தனித்துறை
- கரிசல் மண் எடுக்க தடையில்லா அனுமதி
- ஆட்டோ வாங்க மானியம்.
- கிராமப்புற பூசாரிகளுக்கு ஓய்வூதியம்
- உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை.
- அனைத்து மாவட்டங்களிலும் தொழில் பேட்டை
- அனைத்து கோவில்களும் புனரமைப்பு-
இப்படி அ.தி.மு.க. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
இவை அனைத்துமே அ.தி.மு.க. அறிவிப்பதற்கு முன்னதாக தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில் இருக்கிறது.
அதனையே அப்படியே காப்பி அடித்து எழுதி, டைப் செய்து, ஸ்பைரல் பைண்டிங் போட்டு ( புத்தகமாகக் கூட தயாரிக்க பாவம் நேரமில்லை!) எடுத்துக் கொடுத்துவிட்டார்கள்.
இது பற்றிக் கேட்டால், 'எங்கள் ஆட்கள் தி.மு.க.வுக்கு தகவல் கொடுத்துவிட்டார்கள்' என்கிறார் பழனிசாமி. 'நாங்கள் செய்யப் போவதை தெரிந்துகொண்டு ஸ்டாலின் அறிவித்துவிட்டார்' என்கிறார் பழனிசாமி.
அரசாங்கத்தின் ரகசியங்கள் கசியும் அளவுக்குத்தான் அ.தி.மு.க.அரசாங்கம் இருக்கிறதா? ஒரு எதிர்க்கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால் ஆளும்கட்சியும் அதையே எப்படி வழிமொழியமுடியும்?
'நாங்கள் இதையெல்லாம் செய்துவிட்டோம்' என்று சொல்லவேண்டாமா? அப்படிச் சொல்வதற்கு ஏதாவது பழனிசாமியிடம் இருக்கிறதா?
பத்தாண்டு காலம் அ.தி.மு.க. என்ன செய்தது? எதுவும் செய்யவில்லை. 2011ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையையும் நிறைவேற்றவில்லை. 2016 ஆம் ஆண்டுதேர்தல் அறிக்கையையும் நிறைவேற்றவில்லை.
சட்டமன்றத்தில் சொல்லப்பட்டவையும் காற்றோடு போனது. விதி எண் 110 இன் கீழ் செய்யப்பட்ட அறிவிப்புகளும் அத்தோடு போனது.
இப்படி மொத்தமாக அனைத்து வாக்குறுதிகளையும் காற்றில் பறக்க விட்ட அரசுதான் அ.தி.மு.க. அரசு. இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications