ஒரு பொய்யர் முதல்வராக இருக்கிறார்.. விஜய்யை கடுமையாக விமர்சித்த ஆ ராசா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எ.வ. வேலு சிங்கப்பூருக்கு ஓடிவிட்டதாக விஜய் சொல்கிறார். ஒரு முதல்வருக்கு யார் யார் எங்க போறார் என்று தெரியாதா.. முதல்வர் பொய் சொல்லலாமா.. வெட்கமாக இருக்கிறது. காமராஜர், ராஜாஜி எல்லாரும் இருந்த இடத்தில் ஒரு பொய்யர் முதல்வராக இருக்கிறார்.. என விஜய்யை திமுக எம்பி ஆ ராசா கடுமையாக விமர்சித்தார். மேலும், எந்த பார்டி பண்ட் என கேட்டதற்கு சட்டசபையில் பதிலே சொல்லவில்லை. தைரியம் இருந்தால் அதை சொல்ல வேண்டியது தானே.." என விமர்சித்து இருந்தார்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ ராசா கரூரில் விஜய் பேசியதற்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-

DMK MP A Raja Calls Vijay A Liar Criticises Him Over EV Velu Remark and Party Fund Issue

எ.வ வேலு சிங்கப்பூர் எதுக்கு போனார்?

சிங்கப்பூருக்கு ஓடிட்டாரு என சொல்றார்.. தேர்தலுக்கு பிறகு எ.வ. வேலுக்கு உடல்நிலை சரியில்லை.. சில பிரச்சினைகள் இருந்தது. அவர் சிங்கப்பூருக்கு டிக்கெட் போட்டது 17 ஆம் தேதி.. முதல்வர் விஜய் அவர்களே.. 25 ஆம் தேதி போவதற்கு டிக்கெட் போட்டிருந்தார். 25 ஆம் தேதி 11 மணிக்கு டிக்கெட் போடனும். ஆனால் அன்னைக்கு காலையிலேயே ரெய்டு.. அதனால் அப்போதே டிக்கெட் போட வேண்டாம் என்று 2 நாட்கள் கழித்து சென்றார்.

டிக்கெட் போட்டது 17 ஆம் தேதி, ஆனால் ரெய்டுக்கு எல்லாம் ஒத்துழைப்பு கொடுத்துவிட்டு எல்லாம் முடிந்த பிறகு தான் அவர் சிங்கப்பூருக்கு சென்றார். ஆனால் இது எல்லாம் தெரியாமல் இப்படியா பொய் சொல்வது.. இன்டெலிஜென்ஸ் இருப்பது தெரியாதா.. ஒரு முதல்வருக்கு யார் யார் எங்க போறார் என்று கூட தெரியாதா.. ஒரே பொய்யா சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி.. முதல்வர் பொய் சொல்லலாமா.. வெட்கமாக இருக்கிறது. காமராஜர், ராஜாஜி எல்லாரும் இருந்த இடத்தில் ஒரு பொய்யர் முதல்வராக இருக்கிறார்..

"பார்டி பண்ட்" என சொன்னதும்

"பார்டி பண்ட்" என சொன்னதும் எல்லாரும் ஓடுகிறார்களாம்.. உங்களை என்ன என்ற சொல்வது.. பொய்யர் என சொல்வதா? எனக்கு ஒன்னும் புரியல.. எதிர்க்கட்சி தலைவர் எழுந்து சொல்கிறார்.. பார்டி பண்ட் என சொல்றீங்க.. எந்த பார்ட்டி, எந்த பண்ட் என கேட்டார். இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்குன்னு சொன்னார்.

ஆனா இதற்கு எதுவும் பதில் சொல்லல.. முதல்வர் விஜய் எதுவுமே சொல்லவில்லை. அவருக்கு எழுதி கொடுத்ததை வாசிக்க மட்டும் தான் தெரியும். இன்னொரு தம்பி முந்திரிக்கொட்டை, அந்த பையன் எழுந்து பதில் சொல்றார். நாங்க எந்த பார்ட்டி என சொல்லவில்லை.. நீங்க எந்த பார்ட்டி என சொல்லி நாங்க வெளிநடப்பு செய்திருந்தால் பரவாயில்லை. நீ எந்த பார்ட்டின்னு சொல்லவில்லை.. முதலில் அதை சொல்லுங்க.. அதுக்கு தைரியம் இருக்கா.. துப்பில்லை.. முதுகெலும்பு இல்லை.. அரவைக்காடு அமைச்சர்களை வைத்துக்கொண்டு இருப்பதற்கு பதிலாக அவர்கள் வெளியே வந்தனர். அது தான் உண்மை.. அதைவிட்டுவிட்டு ஓடினார்.. ஓடினார்னு.. என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+