எம்ஜிஆர் குறித்து திமுக எம்பி ஆ ராசா சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த அதிமுகவினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து திமுக எம்பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் பேசிய ஒரு வார்த்தை அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துவிட்டது.

நீலகிரி எம்பி ராசா பேசிய ஒரு காணொலி வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில் நான் எம்ஜிஆரை மதிக்கிறதே இல்லை. ஒரு வெள்ளைக்காரன் வெளியில் இருந்து வந்தவனுக்கு இந்த மண்ணின் மாண்பை மதிக்கக் கூடிய பேராண்மை இருந்தது என கூறிய ராசா, எம்ஜிஆரை தரம் தாழ்ந்த வகையிலான ஒரு வார்த்தையை பேசியிருந்தார்.

DMK MP A Raja criticises very badly on MGR

முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்ஜிஆர் பேசியுள்ளதற்கு அதிமுகவை சாராதவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் எப்போதும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை தரம் தாழ்ந்தவர்கள் மட்டுமே சொல்ல முடியும்.

எம்ஜிஆரை பற்றி அவர் பேசிய அந்த வார்த்தையை கருணாநிதி மீது எங்களாலும் பேச முடியும். எம்ஜிஆர் குறித்து நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் ராசாவுக்கு என்ன தெரியும். தமிழகத்தின் பெருமையை இந்தியா முழுவதும் தனது 2ஜி எனப்படும் இமலாய ஊழலால் சிதைத்தவர் ஆ ராசா.

அவருடைய தலைவர் கருணாநிதி ஆட்சிக்கு வர வழிகோலிட்டவரே எம்ஜிஆர்தான். அது போல் ஒரு கட்டத்தில் கருணாநிதி குடும்பமே நடுத்தெருவில் நின்ற போது எங்கள் தங்கம் படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்தவர் எம்ஜிஆர்தான். இதை நான் சொல்லவில்லை. முரசொலி மாறனே ஒரு பத்திரிகையாளர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏன் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை படிக்க வைத்ததே எம்ஜிஆர்தான். அதெல்லாம் ராசாவுக்கு எங்கே தெரிய போகிறது. வாயை மூடிக் கொண்டிருந்தால் அவருக்கு நல்லது, இல்லாவிட்டால் வாங்கிக் கட்டி கொள்வார் என ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+