திராவிட மாடல் குறித்த ஆளுநரின் பேச்சு..இப்படியே பேசிக்கொண்டு இருந்தால்..திமுக எம்பி ஆ.ராசா விமர்சனம்
சென்னை: உங்களுக்கு அரசியல் சட்டத்தில் என்ன வேலை கொடுத்தார்கள்.. என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று ஆளுநரின் திராவிட மாடல் குறித்த பேச்சை விமர்சனம் செய்து திமுக எம்.பி ஆ.ராசா பேசினர்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் உள்ளது. குறிப்பாக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்று விமர்சித்து இருந்தது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் கருத்துக்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
திமுக அரசு பொறுப்பேற்று இரு ஆண்டுகள் முடிந்துள்ளது. இதையொட்டி திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இது குறித்து முதல்வர் கூறுகையில், "திராவிடம் என்பது காலாவதியான கொள்கை ஆளுநர் சொல்லி இருக்கிறார். ஆளுநருக்கு சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கை கிடையது. சனாதனம் உள்ளிட்டவற்றை காலாவதியாக்கியதுதான் திராவிடம். அந்நிய படையெடுப்பாக இருந்தாலும், ஆரிய படையெடுப்புகளாக இருந்தாலும், அதனை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம் எனவேதான் அதை பார்த்து ஆளுநர் பயப்படுகிறார்" என்று பேசியிருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்களுக்கு எதிராக திமுகவின் முக்கிய தலைவர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில், கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக கொள்கை பரப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவும் ஆளுநரின் கருத்தை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து ஆ.ராசா கூறியதாவது:-
திராவிட மாடல் பொய்த்து விட்டது என்று ஆளுநர் சொல்கிறார். அவர் எங்கே போய் பி.எச்.டி மெற்கொண்டார். நாடாளுமன்றத்தில் ஆளுநர் குறித்து சொன்னேன். அரசியல் சட்டத்தில் இருக்கிற ஒரு அறியாத மூடர் என்று சொன்னேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இதே மாதிரி பேசிக்கொண்டு இருந்தால் ஆளுநர் ரவியும் Constitutional Idiot ஆகி விடுவார். உங்களுக்கு அரசியல் சட்டத்தில் என்ன வேலை கொடுத்தார்கள்..என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள். ஆரிய மாடல் ரவி, திராவிட மாடல் நாங்கள்" விவாதத்திற்கு நான் தயராக இருக்கிறேன்" என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications