Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் போரில் பிரதமருக்கு மனக் கலக்கம்! இதுக்கே பயப்படலாமா? ஒன்றை மட்டும் மறந்துடாதீங்க -வில்சன் MP

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா என்கிற பெயரைப் புறந்தள்ளிவிட்டு, பாரதம் என்று பெயரிட முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்புச் சபையால் நிராகரிக்கப்பட்டது என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் கூறியுள்ளார்.

பாரத் என்கிற பெயரை ஏன் பயன்படுத்த முடியாது என்பதற்கான சட்ட விளக்கத்தையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;

DMK MP and senior lawyer Wilson asked, Does the BJP fear the very name of India?

''இந்தியா என்கிற பெயருக்கே பாஜக அஞ்சுகிறதா? இந்தியாவையும் பாரதத்தையும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தலாம் என்கிற வாதம் அரசியலமைப்பின் பிரிவு 1 இன் மேலோட்டமான கருத்து. இந்தியா, அதாவது பாரத் என்பதாகும். பாரத் என்றும் அறியப்படுவது இந்தியா என்பதல்ல.

இந்தியா என்கிற பெயரைப் புறந்தள்ளிவிட்டு, பாரதம் என்று பெயரிட முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்புச் சபையால் நிராகரிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்திய குடியரசுத் தலைவரின் செயலகமானது பாரத குடியரசுத் தலைவர் எனும் பெயரில் அழைப்பிதழ்களை ஆங்கில பதிப்பில் வழங்கியுள்ளது அரசியலமைப்பிற்கு எதிரானது.

அரசியலமைப்பின் பிரிவு 52 இந்திய குடியரசுத்தலைவர் என்றே கூறுகிறது. அரசியலமைப்பின் இந்த பிரிவு திருத்தப்படாதவரை அதன் பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது பாரத குடியரசுத் தலைவர் என்று மாற்ற முடியாது.

அதே போன்று, துணைக்குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம், அரசு தலைமை வழக்கறிஞர், இந்திய கணக்காயர் & தலைமைத் தணிக்கையர் உள்ளிட்டவற்றையும் ஆங்கிலத்தில் குறிப்பிடும் போது இந்தியா என்று முன்மொழியப்பட்டே குறிப்பிட வேண்டும். பாரத் என்று அல்ல..

மேலும், பாரத் ரிசர்வ் வங்கி என்று இல்லாமல், இந்திய ரிசர்வ் வங்கி என்று பெயர் தாங்கியுள்ள ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வீர்கள்?
இந்தியா கூட்டணியுடனான அரசியல் போரில் மனக்கலக்கமுற்று இருப்பதன் காரணமாக தேசத்தின் அடையாளத்தை மாற்றும் பாதையில் செல்ல வேண்டாம் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+