"ஒரு குட்டி கதை சொல்லட்டுமா.. இது ஒரு பொழப்பு"... பாமகவை ட்வீட் போட்டு தெறிக்க விட்ட திமுக எம்பி!

அன்புமணி ராமதாஸை கலாய்த்து திமுக எம்பி ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இதுவே ஒரு பொழப்புன்னு.. இதுக்கு பேரு என்ன தெரியுமா?" என்று அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக எம்பி செந்தில்குமார்.. இது போதாதென்று ஒரு குட்டி கதை சொல்லட்டுமா என்று ட்வீட் போட்டு ஒட்டுமொத்த பாமகவையும் உசுப்பேற்றி விட்டுள்ளார்.

சில தினங்களாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரிடம் திமுக ஆலோசனை பெற்று வருகிறது.. இதனை அக்கட்சி தலைவர் ஸ்டாலினே அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இருந்தார்.. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் இது சம்பந்தமான கருத்து தெரிவித்து வந்தனர்.

அதே போல் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் பேசும்போது திமுகவிடம் உள்ள சரக்கு மக்கிப்போன சரக்கு, 'மக்கு'கின்ற சரக்கு என்று கூறியிருந்தார். அன்புமணி சொன்ன இந்த கருத்தினை பாமகவின் பாலு தனது ட்விட்டரிலும் பகிர்ந்திருந்தார்.

குட்டி கதை

குட்டி கதை

இதனை தான் திமுக எம்பி செந்தில்குமார் ட்வீட் போட்டு விமர்சித்துள்ளார்.. "நான் ஒரு குட்டி கதை சொல்லட்டுமா" என்று டைட்டில் தந்து கதையை ஆரம்பிக்கிறார் செந்தில்குமார். "சிலர் ஒரு கடைக்கு சென்று நன்றாக சாப்பிட்டு விட்டு, கடைக்காரரிடமே பணமும் கேட்டு, கடைக்காரர் இல்லை என்றதும், ச ச மக்கிப்போன சரக்கு என்று சொல்லி விட்டு பக்கத்து கடைக்கு சென்று சரக்கு அடித்து.... இதுவே ஒரு பொழப்புன்னு.. இதுக்கு பேரு என்ன தெரியுமா" என்று சரமாரியாக விமர்சித்துள்ளார்.

அன்புமணி

மேலும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.. அது செய்தியாளர்கள் ஒருமுறை அன்புமணியை பேட்டி எடுத்தபோது எடுத்த வீடியோவாகும்.. அதில், "அதிமுக கூட நீங்க பேசுறதுக்கு முன்னாடி திமுககூட பேச்சுவார்த்தை நடத்துனீங்களா இல்லையா?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு அன்புமணி, "தனியாக எந்த கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.

கேள்விகள்

கேள்விகள்

கடந்த 4 தேர்தலில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.. விமர்சனம் நாங்கள் செய்தோம். நான் மறுக்கல.. அதிமுக எங்களை ஏற்று கொண்டார்கள், எங்கள் கட்சி தொண்டர்கள் எங்களை ஏற்று கொண்டுள்ளனர்" என்று பதிலளிக்கிறார்..இதை தொடர்ந்து செய்தியாளர்களும் பாமக-அதிமுக கூட்டணி தொடர்பான பல கேள்விகளை எழுப்புகிறார்கள். அந்த வீடியோ இப்படி முடிகிறது.

விமர்சனங்கள்

இந்த வீடியோவை தன்னுடைய ட்வீட்டில் பகிர்ந்த செந்தில்குமார் "புது சரக்கு கடைய தேடி போன காரணம் சொல்றாரு.. @draramadoss.. எல்லாம் கேட்டுக்கோங்க" என்று கேப்ஷன் ஒன்றினையும் தந்துள்ளார். அளவுக்கு அதிகமான பாமகவையும், அன்புமணியையும் விமர்சித்து பதிவிட்ட இந்த ட்வீட்களுக்கு திமுகவினர் கிளாப் அடித்து வரவேற்று வருகிறார்கள்.. அதேபோல, பாமக தொண்டர்கள் சினம்கொண்ட கருத்தினை பதிவிட்டு வருகிறார்கள்.. ஆனாலும் செந்தில்குமார் சொன்ன அந்த குட்டி கதையை நிறைய பேர் ஷேர் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+