திமுக எம்பியின் சகோதரர்.. நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் மாரடைப்பால் மரணம்- விஸ்வாசம், கைதியில் நடித்தவர்
சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் (வயது 61) மாரடைப்பால் இன்று காலமானார்.
Recommended Video
மாசிலாமணி, வேதாளம், கைதி உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர். 1993ஆம் ஆண்டு வெளியான 'பேண்டு மாஸ்டர்' படத்தின் மூலம்தான் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.
அந்த படத்தில் இவர் துணை இயக்குனராக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் பணியாற்றி இருந்தார்.

பல்வேறு படங்கள்
அதன்பின் பல்வேறு படங்களில் இவர் உதவி இயக்குனராகவும், திரைக்கதை உதவியாளராகவும் பணியாற்றி இருக்கிறார். ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த 'கோலங்கள் படத்தில் இவர் வசனம் எழுதி இருக்கிறார். அந்த படத்தில்தான் முதல் முறையாக திரையிலும் தோன்றி சிறிய வேடம் ஒன்றையும் ஏற்று இருந்தார்.

முதல் வாய்ப்பு
பின்னர் பல்வேறு படங்களில் வெவ்வேறு வாய்ப்புகளை பெற்றவர் அவ்வப்போது காமெடி ரோலிலும் நடித்துள்ளார். பல்வேறு காமெடி காட்சிகளில் இவர் விவேக், வடிவேலு ஆகியோருடன் தோன்றி உள்ளார். சமீபத்தில் இவர், வேதாளம், கைதி, காப்பான், விசுவாசம் போன்ற படங்களில் இவர் நடித்து கவனம் பெற்றார். குணசித்திர நடிப்பிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் இவர் கவனம் ஈர்த்தார்.

ஆர்.என்.ஆர்.மனோகர்
இந்த நிலையில் சென்னையில் நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் மாரடைப்பால் இன்று காலமானார். சென்னையில் இவர் வீட்டில் இருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மரணம்
தீவிர சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.என்.ஆர்.மனோகரின் மகன் ரஞ்சன் கடந்த 2012 ஆகஸ்ட் 16 அன்று சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் நீச்சல்குளத்தில் மூழ்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications