அதிகாலையே திமுகவிற்கு ஷாக்.. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு குறி.. 40 இடங்களில் ஐடி ரெய்டு.. திக்திக்
சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ஐடி ரெய்டு நடத்தி வருகின்றனர். அவர் வீடு மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 40 இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது,
திமுக எம்பியான ஜெகத்ரட்சகன்.. அரசியல் தாண்டி பல்வேறு தொழில்களை செய்து வரும் தொழிலதிபர். இந்த நிலையில்தான் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அவருக்கு எதிராக ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.

ரெய்டு மேல் ரெய்டு: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக அமலாக்கத்துறை அடிக்கடி ரெய்டுகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளனார். வேலைவாய்ப்பு வாங்கி கொடுப்பதில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை ரெய்டுக்கு செந்தில் பாலாஜி உள்ளனார். இதில் அவரிடம் நீண்ட விசாரணை நடத்தி அமலாக்கத்துறை அவரை கைதும் செய்ததும்.
தற்போது புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இதுவரை பெயில் கிடைக்கவில்லை. அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை மூலம் ரெய்டுக்கு உள்ளானார். அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்பின் மணல் விற்பனையாளர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு எல்லாம் பார்க்கும் போது திமுகவின் நிதி ஆதாரங்களில், திமுகவிற்கு தேர்தல் செலவு செய்யும் நபர்களிடம் அமலாக்காக்கத்துறை ரெய்டு நடத்துகிறதோ என்ற கேள்வி எழுந்தது. அதாவது தேர்தல் நேரத்தில் திமுகவை செலவு செய்ய விடாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது.
அதிகாரிகள் குவிப்பு: இந்த நிலையில்தான் தற்போது திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ஐடி ரெய்டு நடத்தி வருகின்றனர். அவர் வீடு மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 40 இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது,
இன்று நடக்கும் ரெய்டு வருமான வரித்துறை ரெய்டு ஆகும். அமலாக்கத்துறை ரெய்டு கிடையாது. அவரின் சொத்து, வருமானம் , நிதி ஆதரங்கள் தொடர்பான ரெய்டாக இது இருக்கலாம். அவருக்கு எதிராக ஏற்கனவே சில சொத்து, வருமான வழக்குகள் உள்ளன. இப்போது நடக்கும் ரெய்டு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நடக்கிறது அல்லது எந்த வழக்கின் அடிப்படையில் நடக்கிறது என்ற விவரம் வெளியாகவில்லை.
ரெய்டு நடக்கும் இடங்களில் அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். 40 இடங்களில் நடக்கும் ரெய்டு இனி மேலும் பல இடங்களில் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதிகாலையே நடக்கும் இந்த ரெய்டு திமுக தரப்பை அதிர வைத்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications