விஜய்யை திருமாவளவன் சந்திப்பாரா.. சட்டென வந்து விழுந்த அந்த கேள்வி.. கனிமொழி கொடுத்த அதிரடி பதில்
சென்னை: திமுகவின் கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி என்றும், கூட்டணி விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக தன்னுடைய நிலைப்பாடை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறிய திமுக எம்பி கனிமொழி , விஜய்யை திருமாவளவன் சந்திப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அதிரடியான பதில் அளித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் விக்கிவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடந்து முடிந்தது. அந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என விஜய் பேசியது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் பேசிய பேச்சுக்கு காங்கிரஸ், விசி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரித்தன.

விசிகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை வன்னி அரசு, ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆதரவு தெரிவித்தாலும், விசிக தலைவர் திருமாவளவன், ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரத்தை தவெக தலைவர் விஜய் அவசரப்பட்டு உடனடியாக அறிவித்தததாக கருதினார். தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டு காலத்திற்கு முன்பே அதிகாரத்தில் பங்கு என அறிவித்ததால் வலை போடுவதற்கு முன்பே கல்லெறிவது போன்றது என்று கூறிய திருமாவளவன், உண்மையிலேயே அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் விருப்பத்தோடு சொன்னதாக தெரியவில்லை என்றும் இந்த அறிவிப்பை ஏற்று எந்தெந்த கட்சிகள் வருவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளதும் என்றும் அப்போது விமர்சித்தார்.
மேலும் திருமாவளவன் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசும் போது, துணை முதல்வர் பதவி உண்டா அல்லது அமைச்சர் பதவிகள் மட்டும் தானா என்பதெல்லாம் குறித்து தீர்மானிக்கப்பட்ட பிறகு அறிவிக்க வேண்டிய அரசியல் யுத்தியை, விஜய் வேண்டுமென்றே பேசியுள்ளதாகவும், திமுக கூட்டணியில் சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி உள்ளார் என்றார் திருமாவளவன் விமர்சித்தார். மேலும் விஜய் சொன்னது போல் அவர் வீசிய அந்த அணுகுண்டு அவருக்கு எதிராக வெடிக்கும் என்றும் திருமாவளவன் கடுமையாக விமர்சித்தார்.
விஜய்யின் பேச்சை ஏற்று செல்ல காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் உள்பட எந்த கட்சியும் தயாராக இல்லை என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டன. அதேநேரம் அதிமுக விஜய் உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி விஜய், அதிமுக உடன் கூட்டணி வைத்தால் அது திமுகவிற்கு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது வரும் 2026 சட்டசபை தேர்தலில் தான் தெரியும். ஏனெனில் விஜய்யின் வாக்கு வாங்கி என்ன என்பது யாருக்கும் தெரியாது. இது ஒருபுறம் எனில் விஜய்யை கடுமையாக விமர்சித்த திருமாவளவன், டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய் உடன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில், அம்பேத்கர் பற்றிய நூலை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக் கொள்ள உள்ளார்.
இதனிடையே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் (india turns pink) நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் துவக்க விழா சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் மாதிரி பள்ளியில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய், திருமாளவனனை சந்திப்பாரா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்பி, திமுக கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக தன்னுடைய நிலைப்பாடை வெளிப்படுத்தி உள்ளார். நாட்டின் மதச்சார்பின்மையை காப்பது முக்கிய கொள்கை. இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது. வெற்றி வாய்ப்புகள் மற்றும் எதிர்ப்புகளை வலுவாக வெளிப்படுத்தக்கூடிய கூட்டணி ஆகும். இந்தியா கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது . அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், திருமாவளவன், விஜய் பங்கேற்க இருப்பது குறித்து கேட்கிறீர்கள்.. கூட்டணி குறித்து தான் நாங்கள் பேச முடியும்.. கூட்டணி தலைவர்கள் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்பது எல்லாம் நாங்கள் கண்காணிக்க தேவையில்லை" என்றார்.
முன்னதாக விழா மேடையில் பேசிய கனிமொழி எம்பி, "இலவச மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் என்பது மாணவிகளுக்கான மிக முக்கியமான நிகழ்ச்சி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியை நடத்தும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் இன்று லட்சக்கணக்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த தலைமுறை சேர்ந்த நீங்கள் உங்களின் உடல் நிலையை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் தன்னை தானே பார்த்துக் கொள்ள வேண்டும், பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இதுதான் நம்முடைய முதல் கடமை.
நம்முடைய உடல் மட்டும்தான் கடைசி மூச்சு வரை நம்முடன் இருக்கும். எனவே உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பெண்களை மார்பக புற்றுநோயால் இறக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள் மார்பக புற்றுநோய் பற்றி அறியாமல் நான்காவது கட்டத்தில் தான் பரிசோதனை செய்கிறார்கள்.
மார்க புற்றுநோயை முதல் நிலையிலேயே கண்டறிந்தால் சுலபமாக குணப்படுத்தலாம். இன்று 50 சதவீத பெண்கள் மார்பக புற்றுநோய் அறிகுறியை முதல் நிலையிலேயே அறிய பரிசோதனை மேற்கொள்ளாத காரணத்தால் தான் உயிரிழந்துள்ளார்கள் . எனவே இங்கே இருக்கக்கூடிய மாணவிகள் மார்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை வெளியே பரப்ப வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும். இதுதான் மகளுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய சீர்' இவ்வாறு கனிமொழி பேசினார்.
-
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா?












Click it and Unblock the Notifications