வஞ்சரம் மீன் வறுவல்.. இறால் தொக்கு.. கோழி குருமா.. கனிமொழி வைத்த தடபுடல் விருந்து! மெனு லிஸ்ட் இதோ!
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வந்துள்ள சோனியா காந்தி உட்பட பெண் தலைவர்களுக்கு, வஞ்சரம் மீன் வறுவல், இறால் தொக்கு, கோழி குறுமா என அறுசுவை அசைவ விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் கனிமொழி எம்.பி.
திமுக மகளிர் உரிமை மாநாடு சனிக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெஹபூபா முஃப்தி , சுப்ரியா சுலே, எம்.பி., அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி, பீகார் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் லெஷி சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஆனி ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் , டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிட்லன் உள்ளிட்டோர் சென்னைக்கு வருகை தந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் சனிக்கிழமை மதியம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் விருந்து கொடுத்தார் கனிமொழி எம்.பி. அவர் அளித்த விருந்தில் இடம்பெற்ற சைவம், அசைவம் ஆகிய இரண்டு வகைகளின் மெனு லிஸ்ட் வருமாறு;
சைவம்: VEG MENU
*குழி பனியாரம்
*வாழைப்பூ வடை
*காளான் தொக்கு
*பச்சை காய் குருமா
*இடியாப்பம்
*பொடி சாதம்
*பொன்னி அரிசி சாதம்
*முருங்கைகாய் சாம்பார்
*தக்காளி ரசம்
*அப்பளம்
*பூசணிக்காய் மோர் குழம்பு
*காலிபிளவர் மிளகு பிரட்டல்
*பீன்ஸ் பருப்பு உஸ்லி
*உருளை வறுவல்
*தயிர் சாதம்
*சுண்டைகாய் வத்தக்குழம்பு
சக்கரை பொங்கல்
திருநெல்வேலி அல்வா
பால் பாயாசம்
அசைவம்: NON VEG MENU
* கோலா உருண்டை
* வஞ்சரம் மீன் வறுவல்
*இறால் தொக்கு
*கோழி குருமா
*ஆம்பூர் மட்டன் பிரியாணி
அசைவ உணவு வகைகளை காட்டிலும் கனிமொழி கொடுத்த விருந்தில் சைவ உணவு வகைகள் அதிகம் இருந்தது கவனிக்கத்தக்கது. இதில் நேட்டிவ் ஸ்பெஷல் எனப்படும் திருநெல்வேலி அல்வாவும், ஆம்பூர் மட்டன் பிரியாணியும் கனிமொழி விருப்பத்தின் பேரில் மெனுவில் சேர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications