யார்னு பாருங்க.. திடீர்னு வார்டுக்கள் நுழைந்து.. "நல்லா இருக்கீங்களா".. மலைக்க வைத்த கனிமொழி
பாதுகாப்பு கவச உடையணிந்து கொரோனா வார்டில் கனிமொழி ஆய்வு செய்தார்
சென்னை: பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.. அங்கிருந்த நோயாளிகளிடம் சென்று "எப்படி இருக்கீங்க? நல்லா இருகககீங்களா?" என்று நலம் விசாரித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார்..
அதற்காக, தன்னுடைய தொகுதியில் 2 வாரங்களாகவே முகாமிட்டு வருகிறார். தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வுகளை கையில் எடுத்துள்ளார்.

பாதுகாப்பு
இதற்காகவே 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்.. இதில் ஒன்று வீடு, இன்னொன்று ஆபீசாக மாற்றியுள்ளார்.. அதனால், அந்த வீட்டில் காலை முதல் இரவு வரை எந்நேரமும் மக்கள் கோரிக்கையுடன் காத்து கிடக்கிறார்கள்.. யார் யார் எந்த கிராமம் என்றெல்லாம் பார்க்காமல், அனைவரின் கோரிக்கைகளும் உடனுக்குடன் தீர்ந்து வருகிறது.

கிராமம்
கிராமம், கிராமமாக செல்கிறார்.. வீடு வீடாக செல்கிறார்.. இதனால், ஏராளமான இளம் பெண்கள், முதியோர்களை சந்தித்து, தொற்றில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது, தடுப்பூசியினால் என்னென்ன நன்மைகள், என்றெல்லாம் பொறுமையாக எடுத்து விவரிக்கிறார்... அந்த வகையில், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது திடீரென கொரோனா பாதுகாப்பு டிரஸ் அணிந்து, கொரோனா வார்டுக்குள் நுழைந்துவிட்டார் கனிமொழி.

சிகிச்சை
அங்கே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அக்கறையுடன் நலம் விசாரித்துள்ளார்... முதலில் மருத்துவமனையை ஆய்வு செய்யதான் சென்றார்.. ஆனால், சிகிச்சை பெற்றும் நோயாளிகளுக்கான தேவைகள், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்தும் நேரிலேயே விசாரிக்க வேண்டும் என்பதாலேயே பாதுகாப்பு உடை அணிந்து வார்டுக்குள் சென்றுள்ளார் கனிமொழி.

கவச உடை
கவச உடையுடன் கனிமொழி வார்டுக்குள் நுழைந்ததுமே, சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளி ஒருவர், தன்னுடைய செல்போனில் இதை போட்டோ எடுத்துவிட்டார்.. அதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது!

பிரச்சாரம்
இப்படித்தான், நடந்து முடிந்த தேர்தலின்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார் கனிமொழி.. டிசம்பர் மாசமே தன்னுடைய பிரச்சாரத்தை முதல்நபராக தொடங்கிவிட்டார் கனிமொழி.. பிரச்சாரத்தின் கடைசி நாளின் பொது கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது... இதனையடுத்து, ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டாக்டர்கள் நீங்கள் ஓட்டுப்போட போக வேண்டாம் என்று அட்வைஸ் தந்திருந்தார்கள்.

வாக்குச்சாவடி
ஆனாலும் கனிமொழி விடவில்லையே.. பாதுகாப்பு உடைகள் அணிந்து, கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், வாக்குச்சாவடி சென்று தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.. இப்போதுள்ளதைவிட அப்போது தொற்று வீரியம் அதிகமாக இருந்தது.. பாதுகாப்பு கவசத்துடன் கனிமொழி ஓட்டுப்போட வந்தது, தைரியமான செயலாக பார்க்கப்பட்டது.. மக்களிடமும் பேசப்பட்டது..

போட்டோ
இப்போதும் அதுபோலவே, பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தை கண்டு தூத்துக்குடி மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களும் பாராட்டி வருகின்றனர்.. இந்த போட்டோதான் இணையத்தில் சுடசுட வைரலாகி கொண்டிருக்கிறது..!
-
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications