ஆன்மீகத்தை நம்பக்கூடிய மக்களும்.. நாத்திகத்தை நம்பக் கூடிய மக்களும் எனது இரு கண்கள்.. கனிமொழி
சென்னை: ஆன்மீகத்தை நம்பக் கூடிய மக்களும், நாத்திகத்தை நம்பக் கூடிய மக்களும் எனது இரு கண்கள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியை செய்து வருவதாக கூறிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தபின் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நாளை நடக்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அறுபடை முருகன் வீடுகளின் கண்காட்சியை பார்க்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகன் மாநாடு தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இது முருகன் மாநாடு அல்ல, சங்கிகள் மாநாடு என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்திருந்தார்.

கனிமொழி பேச்சு
இந்த நிலையில் சென்னையில் திமுக சார்பாக செம்மொழி நாள் தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ-வில் மகளிர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் கனிமொழி பேசுகையில், தமிழ்நாட்டில் முதல்வராக கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின் தான் திருவாரூர் தேர் ஓடியது.
திருவாரூர் தேர்
திமுக இந்துக்களுக்கு விரோதி என்று தொடர்ந்து சொல்வார்கள். ஒரே இடத்தில் நின்ற தேரை ஓட வைத்தது கருணாநிதி தான். வாழ்நாள் முழுவதும் நாத்திகத்தை நம்பிய கருணாநிதி, அதே இந்துக்களுக்காக தேரை ஓட வைத்தார். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும் இப்போதும் பேசி வருகிறார்கள். பெண்களை படிக்க வையுங்கள், திருமணத்திற்கு நான் உதவி செய்கிறேன் என்று அறிவித்தார்.
பெண் கல்வி
அந்த திட்டத்தில் எந்த பாகுபாடும் காட்டவில்லை. பெரும்பான்மையாக அந்த திட்டத்தில் பயன்பெற்றது இந்து பெண்கள் தான். பெண்கள் படித்து பட்டதாரியாக மாறியதோடு, இன்று சாதனையாளர்களாக வலம் வருகிறார்கள். யாரெல்லாம் படிக்க கூடாது என்று ஒரு மதம் வைத்திருந்ததோ, எந்த இந்துகளை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார்களோ, அவர்களுக்கு இந்த சமூகத்தில் நம்பிக்கையை, சுயமரியாதையை உருவாக்கி கொடுத்தது திராவிட இயக்கம் தான்.
முருகன் மாநாடு
பெரும்பான்மையாக இருக்க கூடிய இந்துக்களுக்கு அதிகம் உழைத்திருப்பதும், நன்மை செய்திருப்பதும் திமுக தான். நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், உரிமைத் திட்டம் என்று எதுவாக இருந்தாலும், பெரும்பான்மையாக இருக்க கூடிய மக்களுக்கு தான் கிடைத்து வருகிறது. அதனால் ஏதோ ஒரு மாநாட்டை போட்டுவிட்டு, ஒரு வேல் எடுத்து ஊர்வலம் சென்று நான் தான் பக்தி, மக்களை காப்பாற்றுகிறேன் என்ற பசப்பு வார்த்தைகளை மக்கள் நம்ப தயாராக இல்லை.
இரு கண்கள்
உண்மையில் மக்களுக்கு யார் பணியாற்றுகிறார்கள் என்பது மக்களுக்கும், மகளிருக்கும் நன்றாக தெரியும். திமுக இந்துக்களுக்கு விரோதமாக கட்சி இல்லை. ஆன்மீகத்தை நம்பக் கூடிய மக்களும், நாத்திகத்தை நம்பக் கூடிய மக்களும் எனது இரு கண்கள். திமுக அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியை செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications