“தேசத்திற்கே அவமானம்.. நடவடிக்கை எடுங்க” பாஜக எம்பியின் பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்
சென்னை: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இஸ்லாமிய எம்பி டேனிஷ் அலியை பாஜக எம்பி ரமேஷ் பிதுரி விமர்சித்திருந்து பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி கனிமொழி பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியையடுத்து பல்வேறு தரப்பினரும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலிக்கு எதிராக கூறிய கருத்துக்கள் கடுமையான சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷ் பிதுரி, இஸ்லாமிய எம்பியான டேனிஷ் அலியை பார்த்து, "ஏய் போராளி, ஏய் முஸ்லீம் பயங்கரவாதி" என்று கத்தி கூச்சலிட்டு அவரை விமர்சித்துள்ளார். வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ஒருவர் இப்படி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பாஜக எம்பி பிதுரி பாராளுமன்றத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனையும் அவமதிக்கும் மொழியில் பேசியுள்ளார். பாஜக ஏன் அவரை இடைநீக்கம் செய்யாமல் இன்னும் பாதுகாத்து வருகிறது?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த விவகாரம் குறித்து லோக்சபா ஆளுங்கட்சித் துணைத் தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசனும் இதற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதாவது, "அறிவியலுக்கு எதிரான பழமைவாத பித்துப்பிடித்த ஒரு கூட்டத்திடம் இந்த தேசம் எப்படி சிக்கிக்கிடக்கிறது என்பதன் சான்றுகள்தான் நேற்று BJP
எம்பிக்கள் பேசிய காணொலிகள்.
இதன் உச்சமாக எதிர் கட்சி MP களை தீவிரவாதிகள் என்றும் மாமாக்காரர்கள் என்றும் இன்னும் மோசமான பல வார்த்தைகளைக் கொண்டும் தாக்கினார்கள். அறிவியல் பார்வை, சந்திரயான் வெற்றி, இந்தியா கூட்டணி, அவையின் மாண்பு அனைத்தும் ஒரு சேர ஆளுங்கட்சியால் தாக்கப்பட்ட நாள் நேற்று" என்று தனது x சோஷியல் மீடியாவில் விமர்சித்துள்ளார்.
தொடர் விமர்சனங்களையடுத்து பாஜக தலைவர் ஜே பி நட்டா உத்தரவின் பேரில் எம்பி ரமேஷ் பிதூரிக்கு கட்சி தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான X சோஷியல் மீடியா பக்கத்தில், "பாஜக எம்பி ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்குரியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய வார்த்தைகள் நாடாளுமன்ற கண்ணியத்தையும், ஜனநாயகத்திற்கும் நமது ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளன" என்று கூறியுள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications