"ஆமா.. ஏதாவது ஆச்சுன்னா நீங்களா பொறுப்பு".. கேட்ட பெண்ணுக்கு.. கனிமொழி கொடுத்த அதிரடி வாக்குறுதி!

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு திட்டத்தை கனிமொழி தூத்துக்குடியில் துவங்கி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஆமா.. எங்களை தடுப்பூசி போட்டுக்க சொல்றீங்களே... எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்களா பொறுப்பு? எங்க புள்ள குட்டிங்களை, யார் காப்பாத்துறது?" என்று திமுக எம்பி கனிமொழியை பார்த்து தூய்மை பணியாளர் பெண் ஒருவர் கேட்டுவிட்டார்.. இதையடுத்தே கனிமொழி அதிரடியான நடவடிக்கையை தன்னுடைய தொகுதியில் தொடங்கி உள்ளார்.. கனிமொழி ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வை கண்டு, தூத்துக்கு மக்கள் அசந்துபோய் உள்ளனர்..!

தற்போது கொரோனா தொற்று அதிகமாகி உள்ளது.. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற நேரம், அவருக்கு மிகவும் இக்கட்டான நிலைமையே சூழ்ந்துள்ளது.. அதனால்தான் பொறுப்பேற்று கொண்டதற்கு முன்பிருந்தே, தொற்றை ஒழிக்கும் முயற்சியில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இப்போது இந்த தொற்று பிரச்சனையை சரியாக கையாளாமல் விட்டுவிட்டால், திமுகவுக்கு பெரும் சிக்கல் வந்து சேரும்.. இப்போதே நேற்று ஒருநாள் கடை திறக்க உத்தரவிட்டதற்கு, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர், திமுக அரசை விமர்சிக்கப்பட்டு வருவதையும் மறுக்க முடியாது.

 முயற்சி

முயற்சி

அதேசமயம், தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், என மொத்த பேரும் களமிறங்கினர்.. "ஒருங்கிணைந்து தொற்றை விரட்டுவோம்" என்று ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தைதான் இத்தனை தலைவர்களையும் களத்தில் இறங்க வைத்துள்ளது..!

 திமுக

திமுக

அந்த வகையில், எம்பி கனிமொழியும் தன் தொகுதியை கவனிக்க புறப்பட்டுவிட்டார்.. இப்போதைக்கு தடுப்பூசி ஒன்றுதான் தொற்றை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே தீர்வு என்பதால், அதையே தொகுதி மக்களிடம் முன்னெடுத்து வருகிறார்.

 கேள்வி

கேள்வி

அப்போது தூய்மை பணியாளர் ஒருவர், "எங்களை தடுப்பூசி போட்டுக்க சொல்றீங்களே.. அப்படி ஊசி போட்டு எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, எங்க குடும்பத்தை யார் காப்பாத்துறது?" என்று கேட்டார்.. அதற்கு கனிமொழி, "நீங்கள் தடுப்பூசி போட்டுக்கிட்டால், உங்க குடும்பத்தை நீங்களே காப்பாற்றலாம்" என்று நம்பிக்கை தந்தார்.

 தடுப்பூசி

தடுப்பூசி

இப்படி தொகுதியில் உள்ளவர்களை சந்தித்தும், நேரில் அவர்களது வீடுகளுக்கு சென்றும், தொற்றில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்றும், தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்ன என்பது குறித்தும் விலாவரியாயாக எடுத்து சொல்லி வருகிறார்.. இதற்காக தனி டீமை, அமைப்பை கனிமொழி ஏற்படுத்தி கொள்ளவில்லை.. தானே நேரடியாகவே தொகுதி மக்களை பார்த்து, அவர்களின் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்கி வருகிறார்..

 கனிமொழி

கனிமொழி

மற்றொரு பக்கம், "நடமாடும் தடுப்பூசி மையம்" ஒன்றினை அமைத்துள்ளார்.. இந்த திட்டத்தின்படி, நகரம் முதல் கிராமங்கள்வரை எல்லாருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால், அந்தந்த ஊராட்சித் தலைவர்களின் பங்கு மிக மிக அவசியம் என்பதை உணர்ந்த கனிமொழி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய ஆபீசுக்கும் நேரடியாகவே சென்று, அவர்களை எல்லாம் அழைத்து, ஆலோசனை கூட்டமும் நடத்த போகிறாராம்.

 தலைவர்கள்

தலைவர்கள்

மொத்தம் 403 கிராம ஊராட்சிகளில், 1,745 குக்கிராமங்கள் இருப்பதால், 36 நடமாடும் தடுப்பூசி குழுவும் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த ஒவ்வொரு குழுவிலும் 2 டாக்டர்கள், நர்ஸ்கள், முன்களப்பணியாளர்கள் இருப்பார்கள்.. ஒவ்வொரு கிராமத்துக்கும் இந்த குழு சென்று தடுப்பூசி செலுத்தி வருகிறது... கனிமொழியின் இந்த செயல்பாடுகளை பார்த்த மற்ற ஊராட்சி தலைவர்களும், அலுவலர்களும், மக்களுக்கு விழிப்புணர்வு தரும் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர்.

சபாஷ்

சபாஷ்

விளைவு.. கனிமொழியின் இந்த முயற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருகிகிறது.. நடமாடும் தடுப்பூசி மையம் இருப்பதால், ஒரு சின்ன குக்கிராமம் கூட இதில் மிஸ் ஆகவில்லை.. குக்கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாட்டில்தான்.. அதுவும் நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில்தான்.. அதுவும் நம் கனிமொழியால்தான்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+