மசூதி, சர்ச் முன்பு பெரியார் சிலை எங்கே.. கஸ்தூரி கேட்ட கேள்விக்கு திமுக எம்பி சுளீர் பதில்
சென்னை: மசூதி, சர்ச் அருகே பெரியார் சிலையை பார்த்ததுண்டா என்று நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு திமுக எம்பி செந்தில்குமார் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை மதுரவாயலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாரின் சிலை ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் எதற்கு, அதை அகற்ற வேண்டும் என சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியிருந்தார்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை போலீஸார் தேடி வருகிறார்கள். கனல் கண்ணனுக்கு ஆதரவாக இந்து அமைப்புகளும் பாஜகவினரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

கஸ்தூரி
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ periyar சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

சர்ச், மசூதி
அவர் கேள்வி எழுப்பியதுமே இதோ இந்தா இருக்குல்ல என சர்ச், மசூதி அருகே உள்ள பெரியார் சிலைகளை நெட்டிசன்கள் புகைப்படம் எடுத்து அனுப்ப தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் திமுக எம்பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி கேட்ட கேள்விக்கு பதில் அனுப்பியுள்ளார்.

பெரியார் சிலை
அதாவது மசூதி அருகே பெரியார் சிலை இருக்கும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இது போல் நெட்டிசன்கள் அனுப்பும் பெரியார் புகைப்படங்களை திமுக எம்பி அப்துல்லாவும் தனது பேஸ்புக்கில் ஷேர் செய்து வருகிறார். தொடர்ந்து நெட்டிசன்கள் கஸ்தூரிக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

பெரியார் மண்
அதாவது "இது பெரியார் மண். இந்த மண் குறித்து எதுவும் தெரியாவிட்டால் அமைதியாக இருங்கள். எதற்காக வாயை கொடுத்து மாட்டிக் கொள்கிறீர்கள் என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது போன்ற புகைப்படங்களை அனுப்புவோருக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கேட்கும் கேள்வி ஸ்ரீரங்கம் கோயில் வாயில் போல் சர்ச், மசூதி வாயில்களில் பெரியார் சிலை இருக்கிறதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications