ஒரே டிவிட்.. வைரலோ வைரல்.. 'திராவிடர் ரஜினிக்கு' சீரியஸாக நன்றி சொல்லி கலாய்த்த செந்தில்குமார் !
பெரியார் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பெரியார் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
பெரியார் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு திமுகவினர் கடுமையாக பதில் அளித்து வருகிறார்கள். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி பலர், ரஜினியை கிண்டல் செய்து கலாய்த்து வருகிறார்கள்.
ராமருக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இதில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. சீதை புகைப்படம் எடுத்து செல்லப்பட்டது, இது மிகவும் தவறு என்று ரஜினி குறிப்பிட்டார். மேலும் நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்றுள்ளார்.
|
செம கலாய்
இந்த நிலையில் திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் ரஜினியை கலாய்த்து டிவிட் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் பெரியாரை உயிர் துடிப்புடன் வைத்திருக்க உதவிய திராவிடர் ரஜினிகாந்த்அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று செந்தில்குமார் தனது டிவிட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.
|
செம வைரல்
இவரின் இந்த டிவிட்டிற்கு நெட்டிசன் ஒருவர், அருமையான பதில் என்று, பதில் அளித்துள்ளார்.
|
உதயநிதி எப்படி
சமீப நாட்களாக உதயநிதியும் ரஜினிக்கு இப்படி அதிரடியாக பதில் அளித்து வருகிறார். இதனால் இவர், ரஜினியை உதயநிதி வைத்து டீல் செய்யும் விதம் அழகோ அழகு, என்றுள்ளார்.
|
அரசியல் லாபம்
முன்னதாக தர்பார் பார்த்துவிட்டு டிவிட் செய்த செந்தில்குமார், தர்பார் படத்தை மிகவும் பாராட்டி இருந்தார். அதோடு, அரசியல் லாபங்களுக்காக உங்களை பிறர் ஏமாற்றுவதை தவிருங்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications