கோழைகளே! தைரியம் இருந்தா இளமதியை தனியா பிரஸ்மீட்டுக்கு அனுப்புங்கள்.. திமுக எம்பி சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தைரியம் இருந்தால் இளமதியை தனியாக பிரஸ்மீட்டுக்கு அனுப்புங்கள் என திமுக எம்பி செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கவுந்தர்பாடியை சேர்ந்தவர் செல்வன். இவரும் குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இருவருக்கும் சுயமரியாதை திருமணம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை தாக்கிவிட்டு காதல் ஜோடியை கடத்தி சென்றனர்.

இளமதி

இளமதி

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று காதலனை மட்டும் மீட்டனர். அந்த இடத்தில் இளமதி இல்லை. இதனால் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜரானார். அவர் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

கோழை

கோழை

இது செல்வனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளமதி கடத்தல் தொடர்பாக தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இளமதியின் முடிவு குறித்து திமுக எம்பி செந்தில்குமார் ட்விட்டரில் கூறுகையில் தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது., சமூக நீதி மறுக்கபடுகிறது தற்காலிக வெற்றி என நம்பும் #கோழைகளிடம் கேட்கிறேன்.

பிரஸ்மீட்

பிரஸ்மீட்

#தைரியம் இருந்தால் இளமதியை தனியாக press meet அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து,சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ட்விட்டர்வாசிகள் கொடுத்துள்ளனர்.

சாதி

சாதி

நம்ம ஊருல இப்ப மணி 12.45 இருக்கும், இந்நேரத்திலும் சமூக நீதியை பற்றிய சிந்தனை வணங்குகிறேன். இதற்கான ஏற்பாடுகளை நிச்சயமாக முன்னெடுக்க வேண்டும். நீங்கள் சொன்னது போல இது அனைவருக்கும் தெரிந்த உண்மையே, ஆனால் அதை ஏற்க முடியாத அளவிற்கு சாதி ஒரு கடுமையான திரைவிரித்து மறைத்திருக்கிறது..

எதிர்காலத்தையும் தீர்மானிப்பர்

எதிர்காலத்தையும் தீர்மானிப்பர்

சார் இவர்கள் என்றுமே கோழைகள் தான்! இனி அந்த பெண்ணை தனியாக எங்கும் செல்ல விட மாட்டார்கள்! அந்த பெண் இனி அவர்கள் கட்டுப்பாட்டில் தான்! அவளது எதிர்காலத்தையும் தீர்மானிப்பதும் அவர்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+