ஆண்டாள் கெட்டப்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன்! அடுத்து கன்னியாஸ்திரி வேடமா? அர்ஜுன் சம்பத் சர்ச்சை!
சென்னை: திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மார்கழி பிறப்பையொட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆண்டாள் வேடத்தில் இருப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்து சமய தெய்வங்களை நம்பிக்கைகளை மட்டும் குறி வைத்து இழித்து பழித்து கேலி கிண்டல் செய்து அவமதித்து பேசும்பொழுது அமைதி காத்த தமிழச்சி இன்று ஆண்டாள் வேஷம் போடுகிறார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.
திமுக எம்பி தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரிமான தமிழச்சி தங்கபாண்டியன். ஆண்டாள் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
"அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக் கொடுத்த சுடர்கொடியே !" என்ற பாடலோடு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் என்பதும், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உடன் பிறந்த சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்து சமய தெய்வங்களை நம்பிக்கைகளை மட்டும் குறி வைத்து இழித்து பழித்து கேலி கிண்டல் செய்து அவமதித்து பேசும்பொழுது அமைதி காத்த தமிழச்சி இன்று ஆண்டாள் வேஷம் போடுகிறார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்," சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிப்போம்! கொசு,டெங்கு, மலேரியா, என பேசி இந்து தமிழர்களுக்கு எதிராக செயல்படும் திமுக MP திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.
தன்னை ஆண்டாள் கோலத்தில் அலங்கரித்து இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார். திமுக கவிஞர் ஆண்டாள் தாயாரை இழிவு படுத்திய பொழுது, ஆண்டாள் வேட தமிழச்சி எங்கே போனார்? கம்யூனிஸ்டுகள் மற்றும் திராவிடர் கழக பேச்சாளர்கள் இந்து சமய தெய்வங்களை நம்பிக்கைகளை மட்டும் குறி வைத்து இழித்து பழித்து கேலி கிண்டல் செய்து அவமதித்து பேசும்பொழுது அமைதி காத்த தமிழச்சி இன்று ஆண்டாள் வேஷம் போடுகிறார்!
விரைவில் முஸ்லிம் பெண்மணி வேடம் அணிந்தும் கன்னியாஸ்திரி கோலத்திலும் தன்னை அலங்கரித்து படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்! இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் ரசிப்பார்களா?" என கூறியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications