என்னாது புனித கங்கை நதி தமிழகத்தில் பாய்கிறதா?.. மத்திய அரசை கிண்டல் செய்து திமுக எம்பி ட்வீட்!
சென்னை: புனித கங்கை நதி தமிழகத்தில் பாய்கிறதா, எனக்குத் தெரியவில்லையே என திமுக எம்பி வில்சன் கேலியான ட்வீட்டை போட்டுள்ளார்.
மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்திலிருந்து பெறப்பட்ட பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர்) எதற்காக செலவிடப்படுகிறது என திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சகம் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளது. அதில் கடந்த 3 ஆண்டுகளாக சமூக பொறுப்பு நிதியிலிருந்து 52 லட்சம் ரூபாய் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சகத்தின் பதிலை திமுக மாநிலங்களவை எம்பி வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் தமிழகத்தில் கார்ப்பொரேட் சமூக பொறுப்பு நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு நிதியின் ஒரு பகுதி சுத்தமான கங்கை நிதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

புனித கங்கை நதி
புனித கங்கை நதி தமிழகத்தின் வழியாக பாய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சுமார் 915கோடி 2019-2020 ல் தமிழகத்தில் எப்படி செலவிடப்பட்டது என்ற கேள்விக்கு பதில் இல்லை! என வில்சன் தெரிவித்துள்ளார்.

சமூக பொறுப்பு நிதி
பெருநிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் சமூக பொறுப்பு நிதி அந்த நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதியில் சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த செலவிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் இந்த நிதி பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
|
தூய்மை
இந்த அறிவிப்புக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட சமூக பொறுப்பு நிதி கங்கை நதியை தூய்மைப்படுத்த செலவிடப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை!












Click it and Unblock the Notifications