FCRA மசோதாவால் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களின் சொத்துக்கள் பறிபோகும்.. திமுக எம்பி வில்சன் பேட்டி
சென்னை: வெளிநாடு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டமசோதா 2026 க்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 28 ஆம் தேதி தேசிய பிராத்தனை நாளில் தேசிய உண்ணாவிரத நாளாக கடைபிடிக்க உள்ளோம். ஜூலை 3 ஆம் தேதி FCRA மசோதாவை கண்டித்து போராட்டம் மேற்கொள்ள உள்ளோம்.
வெளிநாடு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டமசோதாவால் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சொத்துக்கள் மட்டுல்ல இந்து கோயில்களின் சொத்துகளும் பறிபோகும். பொது நிறுவனங்களுக்கு வரும் பணங்களை கண்காணிக்க ஏற்கனவே உள்ள குழுக்களே ஏற்கனவே உள்ள நடைமுறைகளே போதுமானது.. எங்களுக்கு இந்த மசோதா வேண்டாம் என திமுக எம்.பி.வில்சன் பேட்டி அளித்துள்ளார்.

Foreign Contribution (Regulation) Amendment (FCRA) Bill எனப்படும் வெளிநாடு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டமசோதா 2026 எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை குழு தலைவருமான, திமுக எம்.பியுமான வில்சன் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது திமுக எம்.பி வில்சன் பேசியதாவது, "வெளிநாடு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்ட மசோதா 2026 நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இது ஒரு கொடூரமான மசோதா. இந்த சட்டமசோதாவில் பல திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள் எனவும் FCRA உரிமம் பெற்ற ஒரு தொண்டு நிறுவனத்தின் பதிவு ரத்தானாலோ அது புதுப்பிக்கப் படவில்லை என்றாலோ அல்லது உரிமத்தை சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனமே சரண்டர் செய்தாலோ அதன் ஆளுகைக்கு உட்பட்ட சொத்துகள் வெளிநாட்டு நிதி ஆகியவை மத்திய அரசால் கையகப்படுத்தப்படலாம், நிர்வகிக்கப் படலாம் அல்லது தேவைப்படின் அரசு அதை விற்பனை செய்யலாம் என்கிறது இந்த மசோதாவில் உள்ளது.
இந்த மசோதா இரண்டு அவையில் நிறைவேற்றி அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாக வந்தால் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் ஜெயின் சமூகத்தினர் சொத்துகள் பறிபோகும்/ வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு லைசன்ஸ் கொடுக்கும் அந்த லைசன்ஸ் இல்லாதவர்கள் பணம் பெற்றால் சட்டப்படி குற்றமாகும் ஏற்கனவே 20 ஆயிரத்து 700 லைசன்ஸ்கள் ரத்து செய்து உள்ளனர்
லைசன்ஸ் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மசோதா சட்டம் ஆகி விட்டால் மத்திய அரசிற்கு சென்று விடும் அப்படி சென்று விட்டால் அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுக்காமலேயே அதை விற்றுவிடலாம் என தெரிவித்தார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. இது சட்டமாக வரும் போது மேல்முறையீடு செய்வது வேறு ஆனால் தவறான முறையில் இந்த லைசன்ஸ் யை கேன்சல் செய்தால் அதற்கு மேல் முறையீடு செய்யும் வகையில் எதுவும் குறிப்பிட வில்லை.. நீதிமன்றத்திற்கு செல்லும் முன்பே மத்திய அரசிற்கு சென்று விடும்
தற்போது இதற்காக சிறுபான்மையினர் மீதான கூட்டு நடவடிக்கை மன்றம் என்ற உருவாக்கி உள்ளோம். இந்த மசோதாவை எதிர்த்து வரும் ஜூன் 28 ஆம் தேதி தேசிய பிராத்தனை நாளில் தேசிய உண்ணாவிரத நாளாக கடைபிடிக்க உள்ளோம். இந்த மசோதாவை எதிர்த்து ஜூலை 3 ஆம் தேதி போராட்ட நாளாக அறிவிக்க உள்ளோம்.அனைத்து நிறுவனங்களும் போராட்டம் மேற்கொள்ள உள்ளோம். கையொழுத்து இயக்கமும் நடத்த உள்ளோம். இந்த கையெழுத்துகளை மாவட்ட ஆட்சியர் மூலம் பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்ப உள்ளோம். இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடி இடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.
அந்தெந்த மாநிலத்தில் போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் மதங்களை கடந்து கட்சிகளை கடந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். ஒரு சில நிறுவனங்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க இ்ந்த மசோதாவை மத்திய அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு பணம் சென்றுவிடும்... மதமாற்றதுக்கு பணம் சென்று விடும் என்றால்... நிழலை பார்த்து கூட பயப்படலாம்... பணம் எங்கு வருகிறது எங்கு செல்கிறது எல்லாமே கண்டு பிடிக்கலாம்... அவ்வளவு அதிகாரம் இருக்கும் போது ஏன் இதுபோன்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். எதையோ காரணம் காட்டுகிறார்கள்.
அவர்கள் சிறுபான்மையினரை இலக்காக வைக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையானோரையும் பாதிக்கும். இந்துக்களின் கோயில்கள், சொத்துகளையும் பறிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த மசோதாவை தெளிவு இல்லாமல் கொண்டு வருகிறார்கள் . மக்கள் விரோத மசோதாவை கொண்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் ஒருமைபாட்டை அமைதியை சீர்குலைக்கும் மசோதாவா இது உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எங்களுக்கு ஆதரவு தருவதாக கூறி உள்ளார். எங்களுக்கு இந்த மசோதாவே தேவையில்லை. பொதுமக்கள் இதற்கு பிறகு இந்த மசோதாவை எதிர்த்து போராட வேண்டும் எனவும் தேசிய அளவில் காங்கிரஸ் கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இந்த மசோதாவிற்கு எதிர்பாக உள்ளனர். நாடாளுமன்றத்திலும் இந்த மசோதவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் போராட்டமும் மேற்கொண்டுள்ளனர். நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான கூட்டு நடவடிக்கை மன்றம் ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வரும் நிலையில் முதலமைச்சர் விஜயை சந்திக்க உள்ளனர்" இவ்வாறு வில்சன் கூறினார்.














Click it and Unblock the Notifications