சேலையை கட் பண்ணி தொழிலதிபர் உடலை இழுத்தேன்.. போலீசிடம் சொன்ன நடிகை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் நடிகை கிரிஷி தாபண்டாவின் பிளாட்டில் தொழிலதிபர் வைஷாக் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்றே நடிகை கிரிஷி தாபண்டாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில் அவர் சொன்ன தகவல் திடுக்கிட வைத்துள்ளது.

பெங்களூர் ஆர்ஆர் நகரில் வசித்து வருபவர் கிரிஷி தாபண்டா. இவர் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2014ம் ஆண்டில் 'மிஸ் கர்நாடகா' பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு திரைத்துறைக்குள் நுழைந்தார். 'அஹிரா', எரடு கனசு, கன்னடகாகி ஒந்தனு ஒத்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

i-cut-the-saree-and-dragged-the-businessmans-body-says-actress-krishi-thapanda

கன்னட 'பிக்பாஸ் சீசன் 5'ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர் பெங்களூர் ஆர்ஆர் நகரில் உள்ள பிளாட்டிங் தங்கியுள்ளார். இந்நிலையில்தான் அவரது நண்பரும், தொழிலதிபருமான வைஷாக் என்ற வைஷாக் உபாத்யாய் (வயது 45) நேற்று முன்தினம் இரவில் அவரது பிளாட்டில் இறந்து கிடந்தார்.

கிரிஷி தாபண்டாவின் பெட்ரூமில் வைஷாக் இறந்து கிடந்தார். சேலையை பயன்படுத்தி மின்விசிறியில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அப்போது பிளாட்டில் கிரிஷி தாபண்டா இல்லை. அவர் வெளியூர் சென்ற நிலையில் தற்கொலை செய்வதாக வைஷாக் கூறியதால் கிரிஷி தாபண்டா வேகமாக வீடு திரும்பினார். ஆனால் அதற்குள் அவர் தூக்கிட்டு இறந்துபோனார்.

இந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. கிரிஷி தாபண்டாவின் பிளாட்டில் எதற்காக வைஷாக் தற்கொலை செய்து கொண்டார். பிளாட் சாவி எப்படி அவருக்கு கிடைத்தது? என்பது பற்றிய பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இதுபற்றி ஆர்ஆர் நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக போலீசார் நடிகை கிரிஷி தாபண்டா விசாரித்தனர்.

அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது: ''3 நாட்களாக தியான மையத்திற்கு சென்றிருந்தேன். புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் பிளாட்டிற்கு வைஷாக் வந்துள்ளார். பிளாட்டிற்கு 2 சாவிகள். ஒன்று என்னிடம் இருந்தது. இன்னொன்று வைஷாக்கிடம் இருந்தது. தன்னிடம் இருந்த மாற்று சாவியால் கதவை திறந்து வைஷாக் உள்ளே சென்றுள்ளார். அவர் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்வதாக என்னிடம் கூறியதால் உடனடியாக நான் தியான மையத்தில் இருந்து வந்தேன். பெட்ரூமில் வைஷாக் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். சேலையை கட் செய்து உடலை கீழே இறக்கி போலீசாருக்கும், வைஷாக்கின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தேன்'' என்று கூறியுள்ளார்.

இந்த விசாரணையின்போது கிரிஷி தாபண்டாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அவரது செல்போனில் இருந்த மெசேஜ், கால் அழைப்புகள், வாட்ஸ்அப் 'சாட்' ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. இதனால், போலீசார் அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்த பிறகு ஒப்படைத்தனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+