திமுக எம்.பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய மீட்டிங்.. ஆளுநருக்கு எதிராக அதிரடி தீர்மானம்!
சென்னை: திமுக எம்.பிக்கள் ஆலோசனைம் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றறது. முன்னதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிக்கையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29-1-2025 புதன்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அப்போது, திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பொருள் : மத்திய அரசின் 2025-26ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
அதன்படி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை எம்.பிக்களுக்கு வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழக நிதி விவகாரம் பற்றி விவாதங்களை எழுப்புவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக
பாஜக தலைமையிலான மத்திய அரசு, 3வது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு தற்போது, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், 2 ஆம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும் என திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், யுஜிசியின் வரைவு விதிகளை திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். இரும்பு 5,870 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகி உள்ளது என்பதை ஒன்றிய அரசும் பிரதமரும் முன்னெடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications