திமுக எம்.பிக்களுடன் ஸ்டாலின் நடத்திய அவசர ஆலோசனை.. 3 முக்கிய முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது.

DMK MK Stalin chennai

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் வெடிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுகவின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்களும் பங்கேற்றனர்.

மும்மொழிக் கொள்கைக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், மக்களவைத் தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக தென்மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக அல்லாத மற்ற கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானம் : 1

தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சிகளுக்கு துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்

தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் கழக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிப்பதுடன், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 2

மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்

தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 3

தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்படுவோம்

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+