மவுன அஞ்சலி; நலம் விசாரிப்பு; பாடம்; ஸ்பீடு அப்... திமுக எம்.பி.க்கள் கூட்டம் சுவாரஸ்யம்!
சென்னை: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு இன்னுயிர் ஈத்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலியும் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் செலுத்தப்பட்டது.
இதைத்தவிர குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் நடந்துக்கொள்ள வேண்டிய விதம், பேச வேண்டிய பிரச்சனைகள் குறித்தும் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் கூட்டம்
திமுக மக்களவை மற்றும் மாநிலங்களை உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்களிடம் நலம் விசாரித்தவாறு பேச்சை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், எதிர்வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் எந்தெந்த விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என பாடம் எடுத்திருக்கிறார்.

நீட் எதிர்ப்பு
அந்த வகையில் நீட் எதிர்ப்பு பிரதானமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட இன்னும் சில அட்வைஸ்களை கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளில் ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் டெல்லி போராட்டக்களத்தில் உயிர்நீத்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தீர்மானம்
அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற செயல்பாடுகளில் ஒவ்வொருவரும் ஈடுபாடு காட்ட வேண்ட எனவும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழைவெள்ள நிவாரண நிதியை விரைந்து பெற திமுக எம்.பி.க்கள் பாலோ அப் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஸ்பீடு அப்
இதேபோல் ஒரு சிலர் இன்னும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்றும் ஸ்பீடு போதாதாது எனவும் பெயர் குறிப்பிடாமல் எம்.பி.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது பலருக்கும் ஜெர்க்கை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட நேரம் இழுக்காமல் ஒரு மணி நேரத்திற்குள் இந்தக் கூட்டத்தை சுருக்கமாக நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications