வாழ்க உதயநிதி ஸ்டாலின்.. நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து கேட்ட குரல்.. கவனம் ஈர்த்த தமிழக எம்பிக்கள்
சென்னை: இன்று நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக பதவி ஏற்ற திமுக எம்பிக்கள், வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என்று முழக்கமிட்டனர்.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த 2 வாரம் முன்பு வெளியானது. 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

240 இடங்களில் பாஜக வென்றுள்ளது இதனால் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.
கிங் மேக்கர்கள்: 240 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பாஜக பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாகவே உள்ளது. என். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் முறையே 16 மற்றும் 12 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியமான நபர்களாக உருவெடுத்து 'கிங்மேக்கர்களாக' உள்ளனர். இவர்களின் ஆதரவுடன்தான் மோடி பதவி ஏற்று உள்ளார்.
தமிழ்நாடு; தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. கடந்த இரண்டு நாட்களாக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்று வருகின்றனர்.
இன்று மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன், தமிழில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். வடமாநில எம்பிக்கள் இந்தியில் பதவி ஏற்ற போது, நாடாளுமன்றத்தில் தமிழில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் உறுதிமொழி எடுத்தனர்.
முக்கியமாக, திமுக எம்பி தயாநிதி மாறன், வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டார். திமுக எம்பிக்கள் பெரும்பாலும் வருங்காலம் எங்கள் உதயநிதி என முழக்கமிட்டனர்.
உதயநிதி முழக்கம்; கடந்த முறை திமுக எம்பிக்கள் வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர், என்று முழக்கமிட்டனர். இந்த முறை கூடுதலாக வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை தமிழில் பதவியேற்றார். வாழ்க தமிழ்! கருணாநிதி- ஸ்டாலின் - உதயநிதி - பொதுப்பணித்துறை அமைச்சர் (எ.வ.வேலு) வாழ்க என முழக்கமிட்டார் திமுக எம்பி அண்ணாதுரை. திருவள்ளூர் தொகுதி எம்பி சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்றார். வாழிய வையகம்! வாழ்க தமிழ்! தலித்- ஆதிவாசிகள்- சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என முழக்கமிட்டார் சசிகாந்த் செந்தில்.
மேலும், திமுக எம்பி கலாநிதி வீராசாமி, பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க! திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என முழக்கமிட்டார் . ஆரணி எம்பி தரணிவேந்தன், கருணாநிதி- ஸ்டாலின், உதயநிதி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க என முழக்கமிட்டார்.












Click it and Unblock the Notifications