அசைக்க முடியாத திமுக? மாநகராட்சிகளை கலைக்க தவெக பிளான் போடுதா! உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே அதிரடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தவெகவின் அடுத்த பெரிய சவால் உள்ளாட்சி தேர்தலாகும்.. ஆட்சியை பிடித்துவிட்டாலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவின் வலுவான கட்டமைப்பே இன்னமும் நீடிக்கிறது.. அதனால் இதனை மாற்றி, உள்ளாட்சி அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தவெக அடுத்தகட்ட அரசியல் வியூகத்தை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளாட்சி தேர்தலை குறிவைத்து தவெக ரெடியாகி வருகிறது. ஆனால் இது ஏதோ இப்போது திடீரென உருவாகும் திட்டம் கிடையாது.. கடந்த ஜூன் மாதமே இதற்கான களப்பணியில் தவெக களமிறங்கியது.

DMK municipal corporation TVK corporation plan TVK local body elections

உள்ளாட்சி தேர்தல்

குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, மற்ற கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் 2-ம், 3-ம் கட்ட தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.. இதற்கு ஓரளவு பலனாக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர்.

அடுத்ததாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிற கட்சிகளின் அதிருப்தி நிர்வாகிகள், தேர்தல் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் உள்ளூர் செல்வாக்கு மிக்கவர்களை தவெக தங்கள் பக்கம் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சமூகத் தணிக்கை

அதேபோல், கிராமப்புறங்களில் நகரங்களை விட வேறுபட்ட அணுகுமுறையை கையாளவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்கள், கட்சிகளால் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரை அடையாளம் கண்டு, அவர்களை கட்சிக்குள் கொண்டு வருவதுடன், குடிநீர், சாலை, தெருவிளக்கு, வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட மக்களின் அன்றாட பிரச்சனைகளை முன்வைத்து "சமூகத் தணிக்கை" என்ற பெயரில் களப்பணியிலும் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததாக ஜூன் மாத தகவல்கள் தெரிவித்தன.

தவெகவின் பல வியூகங்கள்

அதுமட்டுமல்லாமல், தனக்கு சாதகமாக இருப்பதாக தவெக கணிக்கும் சுமார் 35 சதவீத வாக்கு ஆதரவை உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக பயன்படுத்தி, பிரதான கட்சிகளுக்கு எதிராக பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதும் தவெக வியூகங்களில் ஒன்றாகும்..

கட்சி அமைப்பை வலுப்படுத்தும் வகையில், இப்போதுள்ள 132 மாவட்ட அமைப்புகளை விரிவுபடுத்தி, தொகுதி அடிப்படையில் 234 கட்சி மாவட்டங்களை உருவாக்கவும், 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு வாரியத் தலைவர் உள்ளிட்ட அரசுப் பொறுப்புகளை வழங்கும் திட்டமும் இருப்பதாக அப்போது கூறப்பட்டது.

மாநகராட்சிகளை கலைக்க திட்டம்?

இப்போது அடுத்தக்கட்டமாக, இத்திட்டங்கள் மேலும் விரிவடைந்து, மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைப்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் மார்ச் மாதம் வரை இருந்தாலும், மாநகராட்சிகளை மட்டும் அதற்கு முன்பாக கலைக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சிகள் கலைக்கப்பட்டால், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்களுக்குப் பதிலாக தனி அதிகாரிகளை நியமிக்க முடியும். மாநகராட்சி நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் தனி அதிகாரிகள் மூலம் செயல்படும். அதன் பிறகு 6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான திட்டமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மார்ச் வரை காத்திருக்காமல் மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைத்து, நிர்வாகத்தை மாற்றி அமைத்து, அதன்பிறகு தேர்தலை சந்திப்பது குறித்து ஆளுங்கட்சி தரப்பில் ஆலோசனை நடைபெறுவதாக தெரிகிறது.

இதற்கு பின்னால் ஒரு முக்கியமான அரசியல் கணக்கும் உள்ளது.. ஆம், உள்ளாட்சி அமைப்புகளில் நீடிக்கும் திமுகவின் ஆதிக்கத்தை உடைப்பதே அந்த வியூகமாகும்..

அசைக்க முடியாத திமுக

சட்டசபையில் ஆட்சி மாறியிருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவுக்கு இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் அரசியல் வலையமைப்பு தொடரவே செய்கிறது. இதனால் ஆட்சியில் தவெக இருந்தாலும், அடிமட்ட அளவில் திமுகவின் அரசியல் செல்வாக்கு தொடர்வதாக தவெக கருதுகிறது. அதனால் மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைப்பதன் மூலம் அந்த அமைப்பிலுள்ள, தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பை மாற்றி, அடுத்த தேர்தலை புதிய சூழலில் சந்திக்கலாம் என்பது ஆளுங்கட்சியின் கணக்காக பார்க்கப்படுகிறது.

வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை முக்கிய பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தவும் தவெக தயாராகி வருகிறதாம்..

குறிப்பாக நகராட்சி துறை தொடர்பான டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார்களுக்கு அரசு தரப்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதும் இதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. தவெக தரப்பில், இந்த புகார்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, "உள்ளாட்சி நிர்வாகத்தில் மாற்றம் தேவை" என்ற கருத்தை உருவாக்க முடியும் என கருதப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் முடிவு என்ன?

இதுதொடர்பான திட்டங்களை தவெக மூத்த அமைச்சர்கள் ஏற்கெனவே முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்களாம்.. ஆனால் மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைப்பது உள்ளிட்ட இறுதி முடிவை முதல்வர் விஜய்தான் எடுப்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மொத்தத்தில் பார்த்தால், தவெகவின் உள்ளாட்சி தேர்தல் வியூகம் ஒரே ஒரு நடவடிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக தெரியவில்லை. கட்சி அமைப்பை வலுப்படுத்துவது, உள்ளூர் செல்வாக்கு மிக்கவர்களை தங்கள் பக்கம் கொண்டு வருவது, நகரங்கள் மற்றும் கிராமங்களில் தனித்தனி களப்பணிகளை மேற்கொள்வது என பல அடுக்குகளில் தேர்தல் தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிக்கம் நிலைநாட்டப்படுமா?

இந்நிலையில், மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்கும் திட்டமும் நடைமுறைக்கு வந்தால், அடுத்த உள்ளாட்சி தேர்தல் வெறும் பதவிகளுக்கான தேர்தலாக மட்டும் இருக்காது. சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய தவெக, அதன்பிறகு அடிமட்ட அரசியலிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முக்கியமான அரசியல் பரீட்சையாக இந்த தேர்தலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும். இதன் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+