"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி இல்லை என்றால்.. கட்சி 4 துண்டுகளாக போயிடும்!" ஆர்எஸ் பாரதி பேச்சு
சென்னை: இப்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பலரும் வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இதற்கிடையே இந்த விவகாரத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். பெரியாருக்கு அண்ணா துணையாக இருந்தது போல ஸ்டாலினுக்கு துணையாக உதயநிதி இருப்பார் எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு கடந்த சனிக்கிழமை வெளியானது. அதில் 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். அதேநேரம் 3 பேர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும், சில அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டன.

இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும், உதயநிதிக்குத் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்தனர்.
பெரியாருக்கு துணையாக அண்ணாவைப் போல: இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த விவகாரத்தில் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெரியாருக்கு அண்ணா துணையாக இருந்தார். அதேபோல அண்ணாவுக்கு கருணாநிதி துணையாக இருந்தார். மேலும், கருணாநிதிக்கு ஸ்டாலின் துணையாக இருந்தார். அதேபோலத் தான் இப்போது ஸ்டாலினுக்கு உதயநிதி துணையாக உள்ளார்.
ஒரு இயக்கம் அல்லது கட்சி இப்படி இருந்தால் தான் சிறப்பாக இருக்கும். அடுத்து வரும் தலைமுறையிலும் வளரும். அடுத்த தலைமுறையை அடையாளம் காட்ட வேண்டும். தலைவருக்கு அடுத்து யார் என்பது தெரியாமல் போனதாலேயே அதிமுக இப்போது நான்கு துண்டுகளாகக் கிடக்கிறது" என்றார்.
அமைச்சரவை மாற்றம்: அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "முந்த்ரா விவகாரம் எழுந்த போது, மத்திய நிதியமைச்சராக இருந்த கிருஷ்ணமாச்சாரி அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், 1962ல் மீண்டும் அதே கிருஷ்ணமாச்சாரிக்கு இலாகா இல்லாத அமைச்சராகப் பதவியை நேரு அளித்தார். அமைச்சர்கள் நீக்கம், சேர்ப்பு எல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடியது.. இந்திய வரலாறு, அரசியல் தெரியாமல் பேசக்கூடாது.
செந்தில் பாலாஜி: மேலும், செந்தில் பாலாஜி வழக்கைப் பொறுத்தவரை அது நீதிமன்றம் முடித்து வைத்த வழக்கு. இப்போது மீண்டும் நடவடிக்கை எடுத்து வழக்குப் போட்டுள்ளார்கள். இப்போது அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பாக நான் கருத்து செல்ல விரும்பவில்லை. மற்ற மாநிலங்களைப் போலத் தமிழ்நாட்டிலும் கைது செய்து தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்றது. ஆனால், தனது கொள்கையில் செந்தில் பாலாஜி உறுதியாக இருந்துவிட்டார். பாஜகவின் எண்ணம் பலிக்காமல் போய்விட்டது" என்றார்.
வாரிசு அரசியல் விவகாரம்: வாரிசு அரசியல் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய அவர், "பாஜகவில் எத்தனை வாரிசுகள் பதவியில் உள்ளனர் தெரியுமா.. இதை நாங்கள் பட்டியல் போட்டே காட்டியிருக்கிறோம். சும்மா இதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக இதையே தான் சொல்லுகிறார்கள். வாரிசு என விலகிச் சென்றவர்கள் கூட மீண்டும் எங்களுடனே வந்துவிட்டார்கள். இது அனைத்து கட்சிகளிலும் இருக்கும் நடைமுறை தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதே தான்" என்றார்.
ராமதாஸ் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அவர், "வன்னியர்கள் 4 அமைச்சர்கள் உள்ளனர். இதுவரை இதுபோல நடந்தது இல்லை. இங்குள்ள அரசு குறித்துக் கேட்பவர் மத்திய அரசிடம் கேட்கச் சொல்லுங்கள்.. அவரது மகன் எம்பியாக இருக்கிறார். அவருக்கு அமைச்சர் பதவி கேட்கலாமே" என்று பதிலளித்தார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications