தயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் புதிய எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல்களில் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுகவின் புதிய எம்பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
இதற்காக புதிய எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் புதிய எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

நினைவிடத்தில் மரியாதை
முன்னதாக புதிய எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை ஸ்டாலின் பேரணியாக சென்றார். பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பெரியார் நினைவிடத்திலும்
கனிமொழி, டிஆர் பாலு, தயாநிதிமாறன், திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோர் கருணாநிதி, அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து
பெரியார் நினைவிடத்திலும் ஸ்டாலின், கனிமொழி, டிஆர் பாலு, ஆ.ராசா, கி.வீரமணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தாயாரிடம் ஆசி
பெரியார் நினைவிடத்தில் வீரமுழக்கமிட்டு திமுகவினர் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றதை தொடர்ந்து ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

ஸ்பீடில் ஸ்டாலின்
இதேபோல் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகனிடமும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆசிபெற்றார். மக்களவைத் தேர்தலில் திமுக தமிழகத்தில் போட்டியிட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஸ்டாலினின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications