Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடுகளைப் போல் அடைக்கும் ஃபார்முலா.. ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்கும் தேமுதிக! பிரேமலதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தலை புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

erode east by election dmdk aiadmk

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உயிரிழந்தார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்:

அவரின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரகுமார் போட்டி:

பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பத்தாம் தேதியிலிருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.

அதிமுக புறக்கணிப்பு:

"வன்முறை என்றாலே திமுக, திமுக என்றாலே அராஜகம் வன்முறை என மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு நடந்து வரும் நிலையில் கடந்த முறை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள், திமுகவின் மிரட்டல் அப்பாவி மக்களை பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது. இதனால் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிக்கிறது" என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தேமுதிகவும் புறக்கணிப்பு:

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்கப் போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது" என கூறியுள்ளார். இதனால் ஈரோடு தேர்தலில் திமுக - பாஜக - நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+