மய்யத்துக்கு 2 சீட்..திமுகவின் ஆஃபர்! 2026க்கு ரெடியான கமல்ஹாசன்! மீண்டும் கோவையில் களமிறங்குகிறாரா?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் கடந்த மக்களவை தேர்தலில் கரம் கோர்த்த கூட்டணி கட்சிகள் உடனேயே திமுக களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட கமலஹாசன், இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறார். இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. சொல்லப் போனால் 60 ஆண்டு கால தமிழக அரசியலில் முதல்வராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் அரசியல் பிரபலங்கலே இருந்திருக்கின்றனர். ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கலாம்.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியை நீக்கிவிட்டு முதன் முதலாக இந்தியாவிலேயே மாநில கட்சி ஆட்சியை அமைத்தவர் அண்ணா. அவர் திரைத்துறையில் இருந்து வந்தவர் தான். மேலும் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் என திரையாண்ட கலைஞர்கள் நாடாள வந்த கதை பல உண்டு.

2026 சட்டமன்ற தேர்தல்
அந்த வகையில் விஜயகாந்த்-க்கு பிறகு அரசியலுக்கு வந்த மிகப் பிரபலமான நட்சத்திரம் என்றால் அது உலகநாயகன் கமலஹாசன் தான். ஆரம்பத்தில் சகலகலா வல்லவனாக திரைத்துறையில் களம் கண்ட கமலஹாசன், அரசியல் ஆசையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரையில் ஆரம்பித்தார். இடதும் இல்லை வலதும் இல்லை மய்யம் என்ற கொள்கையோடு ஆரம்பித்த அவர், அதிமுக திமுக என அனைத்து கட்சிகளையும் விமர்சித்து வந்தார்.
கமல்ஹாசன்
ஆனால் அதற்கு பிறகு நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் கமலுக்கு பலத்த அடியை கொடுத்தது. குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்ட கமலஹாசன் பாஜகவின் வானதி சீனிவாசன் இடம் தோல்வி அடைந்தார். அதற்குப் பிறகு ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டிய அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பத்து தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டதற்கு ஈடாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தந்தது திமுக.
தேர்தல் கூட்டணி
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் கடந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட கமலஹாசன் இந்த முறை முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். ஏற்கனவே திமுக ஒரு தொகுதி பட்டியலை தயார் செய்து கூட்டணி கட்சிகளுக்காக வைத்திருக்கிறது.
கமல்ஹாசன் கோவை தொகுதி
காங்கிரசுக்கு 25 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு பத்து தொகுதிகள், விடுதலை சிறுத்தைகளுக்கு எழு தொகுதிகள் என ஓரளவு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தேமுதிக கூட்டணிக்கு வரலாம் என சொல்லப்படும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை திமுக ஒதுக்கி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் தரப்பை போல மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், அவர்கள் திமுக சின்னத்திலேயே போட்டி விடுவார்கள் என்கின்றனர் திமுகவினர். மேலும் கமல்ஹாசன் இந்த முறை மீண்டும் கோவையில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே!











Click it and Unblock the Notifications