குறிக்கப்பட்ட நாள்! டெல்லிக்கு பறக்கும் முதல்வர் ஸ்டாலின்! முக்கிய தலைகளுடன் மீட்டிங்? என்ன பின்னணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் கட்டப்பட்டு உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்க ஏப்ரல் 2 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

நாடாளுமன்ற இரு அவைகளை சேர்த்து 7 எம்.பிக்களை பெற்று இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க 2006 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு முடிவெடுத்தது.

பாஜக அலுவலகம் அருகே திமுக அலுவலகம்

பாஜக அலுவலகம் அருகே திமுக அலுவலகம்

அதன்படி 15 எம்.பிக்களை கொண்ட கட்சிகளுக்கு 500 சதுர மீட்டர் இடமும், 25 எம்.பிக்களை கொண்ட கட்சிகளுக்கு 1000 சதர மீட்டர், 50 உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு 2,000 சதுர மீட்டர் இடமும், 100 எம்பிக்கள் வரை வைத்திருக்கும் கட்சிகளுக்கு ஒரு ஏக்கரும் 200 எம்பிக்களுக்கு மேல் வைத்துள்ள கட்சிகளுக்கு 4 ஏக்கர் நிலமும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் பேரில் டெல்லி தீன் தயால் உபாத்யாயா மார்க் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்கு அருகாமையில் திமுக அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது.

முதலமைச்சரின் 2 வது டெல்லி பயணம்

முதலமைச்சரின் 2 வது டெல்லி பயணம்

கடந்த ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ஜூன் மாதம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கக்கோரி மனு அளித்தார். அத்துடன் டெல்லியில் நடைபெற்று வந்த திமுக அலுவலக கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் டெல்லிக்கு பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

டெல்லி திமுக

டெல்லி திமுக

இந்த நிலையில், டெல்லியில் திமுக அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இதனை திறந்து வைப்பதற்காக வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். திமுக அலுவலக திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியயோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சோனியா, ராகுல், மம்தாவை அழைக்க திட்டம்

சோனியா, ராகுல், மம்தாவை அழைக்க திட்டம்

மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஆகியோரை அழைக்க திமுக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜக அல்லாத மதசார்பற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து 2024 தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ஸ்டாலினின் டெல்லி பயணம் தேசிய அரசியலில் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+