"ஓவர் கான்பிடன்ஸ்?"... ஆளாளுக்கு போடும் பலே கொக்கி.. அடுத்த லெவலுக்கு தாவும் திமுக..?
திமுக அதிகாரிகள் சிலர் பதவிக்காக காய் நகர்த்தி வருகிறார்களாம்
சென்னை: திமுக தரப்பினர் வேற லெவலில் பிளான் செய்து கொண்டிருக்கிறார்களாம்.. ஒருவேளை திமுக ஆட்சி அமைத்தால், யார் யாருக்கு பதவி கிடைக்கும் என்பது போய், யார் யார் உயர் அதிகாரிகள் என்பது போய், இப்போது இன்னொரு கட்டத்துக்கு நகர்ந்துள்ளது எதிர்பார்ப்புகள்...!
10 நாளைக்கு முன்பு திமுகவின் உத்தேச அமைச்சர்கள் பட்டியல் ஒன்று அதாவது 31 பேர் கொண்ட டம்மி லிஸ்ட் சோஷியல் மீடியாவில் வலம் வந்தது..
பிறகு, கொடைக்கானலில் உதயநிதியும், சபரீசனும் ஆளுக்கு ஒரு அமைச்சர்கள் லிஸ்ட் தயார் செய்து தர, அதை ஸ்டாலினே முன்னின்று பார்த்து பார்த்து கவனித்ததாகவும், சென்னை வருவதற்கு முன்பே அந்த இறுதி லிஸ்ட் தயார் செய்யப்பட்டுவிட்டது என்றும் செய்திகள் வந்தன.

லிஸ்ட்
இதில் சீனியர்கள் & ஜூனியர்கள் என்ற கலவையில் இந்த லிஸ்ட் இருக்கும் என்கிறார்கள்... அந்த லிஸ்ட்டில் இருப்பது யார் யார் என்று தெரிந்து கொள்ள, பல புள்ளிகள், வேறு வேறு ரூட்டிலும் காய் நகர்த்தி கொண்டிருக்கிறார்கள்.. அதேபோல, அரசு அதிகாரிகளையும் திமுக தலைவர் முடிவு செய்துவிட்டதாகவும், அவர்கள் பெயரும் அந்த லிஸ்ட்டில் டிக் அடித்து விட்டதாகவும் பரபரக்கப்பட்டன.

அதிகாரிகள்
இப்போது விஷயம் என்னவென்றால், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அடுத்து பிஏ கேட்டகரி இருக்கும் அல்லவா? அந்த பிஏ கனவில்தான் பலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம்.. திமுக ஆட்சியில் இல்லாமல் 10 வருடம் ஆகிவிட்டது என்றாலும், அந்த கட்சிக்கு வேண்டிய சில அதிகாரிகள், பிஆர்ஓக்கள், அரசு துறைகள், நிறுவனங்களில் இருக்கும் தங்களது கட்சி சார்ந்த தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அடிக்கடி பேசி வருகிறார்களாம்.

முயற்சி
அப்போது, எந்த துறைக்கு யார் அமைச்சர்கள் என்பது முதல், அவர்களுக்கு பிஏ-வாகும்வரை முயற்சிகளும் நடந்து வருகிறதாம். அதேபோல, திமுக ஆதரவு அதிகாரிகள் சிலர், தலைமைச்செயலகத்தில் முக்கிய பொறுப்புகளை வகிக்கவும், அமைச்சர்களிடம், பிஏ பதவிகளை பிடிக்கவும் மும்முரமாகி வருகிறார்களாம்..!

அதிமுக
திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் இப்படி ஒரு மூவ் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறதாம்.. இன்னும் நமக்கு ரிசல்ட்டே வரவில்லை.. அதற்குள் இன்னும் என்னென்ன பரபரப்புகள், புரளிகள், வதந்திகள், தகவல்கள், இப்படி பரவி வரப்போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்












Click it and Unblock the Notifications